Skip to main content

பி.டி.ஆர். தியாகராஜன் மனசாட்சியுடன் பேசவேண்டும்- சீமான்

Published on 18/08/2022 | Edited on 18/08/2022

 

seeman

 

திருச்சி நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் செய்தியாளர்களைச் சந்தித்தார். 

 

2018ம் ஆண்டு திருச்சி விமான நிலையத்தின் வெளியே  மதிமுக கட்சிக்கும் நாம் தமிழர் கட்சிக்கும் இடையே மோதல் எழுந்தது. இரு தரப்பும் தாக்கிக் கொண்டனர். இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருச்சி குற்றவியல் நீதிமன்றம் எண் 6ல் நீதிபதி சிவக்குமார் முன்னிலையில் ஆஜரானார். இரு வழக்குகளில் ஒன்றை கீழமை நீதிமன்றத்தில் செப்டம்பர் 19 க்கு மாற்றி மற்றொரு வழக்கில் செப்டம்பர் 25 இல் மீண்டும் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 

 

மோதல் தொடர்பான வழக்கில் நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருச்சி நீதிமன்றத்தில் ஆஜராகிய பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். 

 

அப்போது பேசிய அவர் "பி.டி.ஆர். தியாகராஜன் நன்கு கற்றவர். அவர் மனச்சான்றுடன் பேசவேண்டும். இலவசங்களால் நாடு வளர்ந்துள்ளது என்பதை அவரால் நிரூபிக்கமுடியுமா. அத்தியாவசிய தேவைகள் தங்களது சொந்த வருமானத்தின் மூலம் நிறைவேற்றிக் கொள்ளக்கூடிய ஒன்று. மக்களை தங்கள் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியாத ஏழ்மையில் வைத்ததை எப்படிச் சாதனையாகச் சொல்லிக் கொள்ள முடியும். இலவசங்களால் நாடு ஒரு அங்குலம் என்ன புள்ளி கூட வளராது. இதேபோல் விவசாய குடிமக்கள் 6000 ரூபாய்க்கு கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டார்கள் என்பதும் பெரும் துயரம். 

 

சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்று 16 ஆண்டு காலம் சிறையிலிருந்த நேருவையும், இருமுறை  மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்த சாவர்க்கரையும் பிரதமர் மோடி ஒப்பிட்டு பேசியுள்ளார். அது எப்படி சரி. ஆங்கிலேயர்களை எதிர்த்து உண்மையாக போராடிய சுபாஷ் சந்திர போஸ், பகத் சிங் போன்றோர் தான் வீரர்கள் சாவர்க்கர் வீரர் அல்ல.

 

அ.தி.மு.க வில் நடப்பது நாட்டுப் பிரச்சனையா அது அவர்களது உட்கட்சி பிரச்சனை அதை அவர்களின் பெரிய நாட்டாமையை வைத்து பேசி கொள்வார்கள். திரைப்படம் அடிதடியாக போகும் பொழுது சின்னதாக நகைச்சுவை வருவதில்லையா அதைப் போல் கடந்து செல்லுங்கள்"என்று கூறியுள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்