கரோனா பீதியால் விசாரணை கைதிகளுக்கு கூட ஜாமீன் கிடைத்து வருகிறது. மேலும் கரோனா நோய் என்பது இலுமினாட்டிகளின் வேலை. அவர்களின் உத்தரவுப்படி இங்கே இருக்கும் மந்திரிகள் ஆடுகிறார்கள் என்று ஆடியோவில் ஒருமையில் அதிரடி கிளப்பினார் மாற்றுமுறை மருத்துவரான ஹீலர் பாஸ்கர். அவரைக் குனியமுத்தூர் போலீஸ் கடந்த 20-ந் தேதி கைது செய்து சிறையில் அடைத்தது. இப்போது கரோனா நெருக்கடியால், ஹீலர் பாஸ்கர் உட்பட விசாரணைக் கைதிகள் பலரும் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், பெங்களூர் சிறையில் இருக்கும் சசிகலாவும், கரோனா பீதியால் பரோலில் வரப் போகிறார் என்ற ஒரு தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது. அதனால் அவரை வரவேற்க மன்னார்குடித் தரப்பு ரெடியாகுது என்றும் செய்திகள் பரவியது. இதுபற்றி விசாரித்த போது, மன்னார்குடித் தரப்புக்கு சசிகலாவை வெளியே கொண்டுவரும் ஆர்வம் இருக்கு என்றும், ஆனால் அவருக்கு எந்த மாதிரியான காரணத்தைக் காட்டி பரோல் கேட்பது என்றும் ஆலோசிக்கப்பட்டிருக்கு, உடல்நலம் சரியில்லை என்று சொல்லலாம். ஆனால் அதற்கு உரிய மருத்துவ சார்டிபிகேட் சிறைக்குள் இருந்தே பெறவேண்டும் என்று அவர்கள் குழம்பியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் சிறையில் இருக்கும் சசியோ, தினகரன், திவாகரன்னு ஆளாளுக்கு ஒருவரோடு ஒருவர் முட்டி மோதிக்கிட்டிருக்கும் நிலையில், தான் வெளியே வந்தால் தனக்கு மேலும் மேலும் தலைவலி ஏற்படும் என்று நினைத்து, பரோல் கேட்கும் முடிவையே கைவிட்டுட்டார் என்கின்றனர். கர்நாடக சிறைத்துறையும் சசிகலாவை பரோலில் அனுப்பும் ஐடியா இல்லை என்று அறிவித்துள்ளது.