Skip to main content

மேம்பாடுகளுக்காக கூட்டணி வைத்தோம், இழப்புதான் மிச்சம்! - சந்திரபாபு நாயுடு 

Published on 30/03/2018 | Edited on 30/03/2018

பா.ஜ.க.வோடு கூட்டணி வைத்திருக்காமல் இருந்திருந்தால் கூடுதலாக 15 தொகுதிகளில் நாங்கள் ஜெயித்திருப்போம் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.  

 

ChandraBabu

 

ஆந்திரப்பிரதேசம் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து கோரி தெலுங்குதேசம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் போராட்டம் நடத்திவருகின்றன. இதே காரணத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் கட்சி விலகுவதாக அறிவித்தது. மேலும், மத்திய அரசால் தாங்கள் வஞ்சிக்கப்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார் அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு.

 

இந்நிலையில், மத்திய அரசு குறித்து சந்திரபாபு நாயுடு, ‘ஆந்திராவில் இருந்து தெலுங்கானா பிரிக்கப்பட்ட பின் நாங்கள் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்தோம். இந்தக் கூட்டணி அரசியல் லாபத்திற்கானதாக இல்லாமல், மாநில மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டு அமைக்கப்பட்டது. ஒருவேளை நாங்கள் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்காமல் இருந்திருந்தால், கூடுதலாக 15 இடங்களில் வெற்றிபெற்றிருப்போம். அவர்கள் ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து தருவதாகக் கூறி எங்களை ஏமாற்றிவிட்டார்கள். வடகிழக்கு மாநிலங்களுக்கு இத்தனை சலுகைகளை தூக்கித் தரமுடிந்த மத்திய அரசு எங்களிடம் மட்டும் ஏன் எதிராக நடந்துகொள்ள வேண்டும்? போதாதென்று பொய்களை வேறு பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்’ என கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார்.

சார்ந்த செய்திகள்