Published on 11/03/2019 | Edited on 11/03/2019
17வது மக்களவைத் தேர்தலுக்கான தேதி நேற்று மாலை அறிவித்தது இந்திய தேர்தல் ஆணையம். இதையடுத்து தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வருதாகவும் அறிவித்தது.

இந்த நிலையில் திருவாரூர் அருகே கானூரில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது நாகையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற காரை நிறுத்தி சோதனை நடத்தினர். அந்த காரில் ரூபாய் 50 லட்சம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து காரில் இருந்த சாகுல் அமீது என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்த வருகின்றனர்.
தேர்தல் நடத்தை நடைமுறைக்கு வந்த பின்னர் முதல் முதலாக திருவாரூர் அருகே ரூபாய் 50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.