Skip to main content

எனது வேண்டுகோளை வைகோ ஏற்றுக்கொள்வார்: பொன்.ராதாகிருஷ்ணன் நம்பிக்கை

Published on 26/02/2019 | Edited on 26/02/2019

 

மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்தார். 
 

அப்போது அவர், 
 

மக்களின் கருத்துக்களை அறிவதற்காக, ‘உங்கள் யோசனைகளை எனக்கு தெரிவியுங்கள்’ என்ற “பாரத் கெ மன் கி பாத், மோடி கெ சாத்” என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளார் பிரதமர் மோடி. இந்த திட்டத்தின்படி மக்களின் ஆலோசனையை கடிதம் மூலம் தெரிவிக்கும்படியும் கூறியுள்ளார். அதாவது பொது இடங்களில் பெட்டிகள் வைக்கப்படும். அதன் அருகில் மக்களின் கருத்துக்களை எழுதும் படிவங்களும் வைக்கப்படும். மக்கள் தங்களது கருத்துக்களை அந்த படிவத்தில் எழுதி பெட்டியில் போடலாம். 
 

இதை டெல்லிக்கு எடுத்துச் சென்று மக்கள் என்ன விரும்புகிறார்கள், என்பதை அறிந்து வரும்காலங்களில் அதன்படி செயல்பட முடியும். மேலும் மக்களின் கருத்துக்களை கொண்டு தேர்தல் அறிக்கை தயாரிக்கப்படும். குமரி மாவட்டத்தில் மொத்தம் 8 பெட்டிகள் வைக்கப்படுகின்றன. இதனை மக்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.


 

pon radhakrishnan vaiko


விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டத்தில் குமரி மாவட்டத்தில் 80 ஆயிரம் குடும்பங்கள் பயன்பெற போகின்றன. இந்த திட்டம் தொடங்கிய உடனேயே நாடு முழுவதும் ஒரு கோடியே ஒரு லட்சம் குடும்பங்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டு விட்டது. இந்த திட்டத்துக்கும், தேர்தலுக்கும் சம்பந்தம் இல்லை. எங்கள் கூட்டணிக்கு விஜயகாந்த் வருவார் என முழுமையாக நம்புகிறேன்.
 

வைகோவிற்கு எனது வெளிப்படையான வேண்டுகோள் ஒன்றை வைக்கிறேன். கன்னியாகுமரி அருகே அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் வருகிற 1-ந் தேதி அரசு விழா நடக்கிறது. அந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு குமரி மாவட்டத்தில் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நல திட்டங்களை தொடங்கி வைக்கிறார். தமிழகத்துக்கு நல்லது செய்ய வருகை தரும் பிரதமருக்கு கருப்புக்கொடி காட்ட வேண்டாம். எனது வேண்டுகோளை வைகோ ஏற்றுக்கொள்வார் என நம்புகிறேன். இவ்வாறு கூறினார்.
 

சார்ந்த செய்திகள்