Skip to main content

தோல்வியால் புலம்பும் காங்கிரஸ்... தேர்தல் புறக்கணிப்புக்கு அதிமுக செய்த அரசியல்!

Published on 29/10/2019 | Edited on 29/10/2019

நாங்குநேரியில் வெற்றி வாய்ப்பை இழந்த காங்கிரஸ் தரப்பில் கூட்டணி கட்சிகள் மீது அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இது பற்றி அரசியல் வட்டாரங்களில் விசாரித்த போது, நாங்குநேரி காங்கிரஸ் வேட்பாளரான ரூபி மனோகரன், 50 கோடியை தேர்தலுக்காக செலவு செய்தேன். திமுகவின் தொகுதிப் பொறுப்பாளர்களான மாஜி மந்திரிகள் ஐ.பெரியசாமியும், கே.கே.எஸ். எஸ்.ஆரும் சரியாக திட்ட மிடாததால் அதில் 15 கோடி எங்கு சென்று பதுங்கியது என்று தெரியவில்லை என வெளிப்படையாக புலம்பிக் கொண்டிருக்கிறார் என்று கூறுகின்றனர். இது தொடர்பாக  திமுக தரப்பிடம் கேட்டால், "தேர்தல் தேதியை அறிவிப்பு செய்வதற்கு முன்பாகவே, இந்தத் தொகுதி காங்கிரஸுக்குத்தான் என்றும், அதை எந்த சூழலிலும் தி.மு.க.விடம் விட்டுக் கொடுக்கமாட்டோம் என்றும் எங்களுக்கு எதிராக கூறிவந்தார்கள். 
 

dmk



 

congress



மேலும் எங்களோடு அவர்கள் இணக்கமாகவே நடந்துகொள்ளவில்லை. இருந்தாலும் கட்சித் தலைமையின் கட்டளைக்குக் கட்டுப்பட்டு உண்மையாகத் தான் இடைத்தேர்தலுக்கு வேலை செய்தோம் என்று கூறுகின்றனர். காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவரைக் கொண்டுவந்து காங்கிரஸ் இங்கே நிறுத்தியதை தொகுதி மக்கள் விரும்பவில்லை. மேலும் தொகுதியில் இருக்கும் ஏறத்தாழ 20 ஆயிரம் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தினர் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டார்கள். இவர்களின் தேர்தல் புறக்கணிப்பை நீட்டிக்க அ.தி.மு.க. வெயிட்டாக கவனிப்பு நடத்தியது என்று சொல்லப்படுகிறது. இவைகள் அனைத்தும் தான் காங்கிரஸின் தோல்விக்கு முக்கிய காரணம் என்று திமுக வட்டாரங்களில் கூறிவருகின்றனர்.   

 

 

சார்ந்த செய்திகள்