
பாஜகவின் ஓ.பி.சி. பிரிவு மாநிலச் செயலாளராக இருந்த திருச்சி சூர்யா சிவா அந்தக் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அந்தக் கட்சியிலிருந்து விலகுவதாக அண்ணாமலைக்கு கடிதம் எழுதியுள்ளதாக ட்விட்டரில் அறிவித்துள்ளார். இதற்கு ஒரு சுவையான பின்னணி காரணம் சொல்லப்படுகிறது.
அலிஷா என்கிற இஸ்லாமியப் பெண்ணிடம் அண்ணாமலை தவறாக பேசியதாகவும், இந்தத் தகவல் கட்சி மேலிடத்திற்கு அனுப்பப் பட்டதாகவும், இதை சூர்யா சிவாதான் செய்தார் எனவும் அமர் பிரசாத் ரெட்டி குற்றம் சாட்டினர்.
நான் அண்ணாமலையின் விசுவாசி. நான் எப்படி கட்சி மேலிடத்திற்கு இது போல் செய்வேன். கேசவ விநாயகம் தான் இந்த வேலையைச் செய்தார் என சூர்யாவுக்கும் அமர் பிரசாத் ரெட்டிக்கும் இடையே சண்டை மூண்டது.
இந்தச் சண்டை அண்ணாமலை வரை சென்றது. ‘நீ ஆபாசப் பேச்சு பேசியதாக நக்கீரன் வெளியிட்ட ஆடியோவுக்குப் பதிலாக என் மீதே குற்றம் சாட்டுகிறாயா’ என இன்று காலை அண்ணாமலைக்கும் சூர்யாவுக்குமான வாக்குவாதம் தடித்தது. அதன் எதிரொலியாக சூர்யா பாஜகவிலிருந்து விலகுவதாக அறிவித்தார் என்கின்றனர் பாஜக வட்டத்தினர்.