போரூர் ராமச்சந்திரா பல்கலைக்கழகத்தில் நடைபெறும் 'மோடி அட் ட்வென்டி-ட்ரீம்ஸ் மீட் டெலிவரி' என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழாவில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஹெச்.ராஜா ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்வில் பேசிய அண்ணாமலை, ''மத்திய அரசின் சார்பில் மோடி கொண்டு வந்துள்ள திட்டங்கள் எல்லாம் எப்படி இன்டெர் கனெக்டெட், காம்போசிட் ஸ்கீம்களாக உள்ளது என இந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ளது. அதிலும் இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் தத்ரூபமாகச் சொல்லியிருக்கிறார். மோடி என்னை அழைத்துப் பேசும் பொழுது இந்தியாவை எப்படி மாத்தனும், இந்தியாவை மாற்றுவதற்கு எப்படி முயற்சி எடுக்கணும், என்னுடைய கனவு என்ன என்று சொன்னார். அவர் சொல்லும்போது நான் நினைத்தேன் மோடி சாதாரண மனிதன் கிடையாது. அரசியல்வாதி என்பதையெல்லாம் தாண்டி, ஒரு ஆளுமைமிக்க மனிதன் என்பதையெல்லாம் தாண்டி கனவுகளை எல்லாம் நினைவாக்க துடித்து கொண்டிருக்கும் மனிதர் என எழுதியிருக்கிறார்.
இந்தப் புத்தகம் என்பது அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம். நமக்கு மோடியைப் பற்றி தெரியாத விஷயங்கள் இல்லை என்று நினைக்கிறோம். இந்தப் புத்தகத்தைப் படித்து முடிக்கும் பொழுது அவரைப் பற்றி தெரியாத பல விஷயங்கள் தெரியவரும். டாப் வேர்ல்ட் லீடர் மோடி. இன்று ட்விட்டரில் எடுத்துப்பார்த்தால் 80 மில்லியன் ஃபாலோவர்ஸ் மோடிக்கு இருக்கிறார்கள். ஃபேஸ்புக், நமோ ஆப் என அவருடைய ப்ரெசன்ஸ் இல்லாத இடமே கிடையாது. இந்தப் புத்தகத்தின் ஒவ்வொரு சாப்டரையும் படிக்கும்பொழுது ஒரு புதிய மோடியை பார்ப்பது போல் நமக்கே தெரியும். கட்சிக்காரர்கள் மட்டுமல்லாது மக்களும் படிக்கும் பொழுது மோடியின் டைம் மேனேஜ்மென்ட், மோடியின் டிசிப்ளின், மோடியின் விஷன் ஆகியவற்றைத் தெரிந்து கொள்ளலாம்'' என்றார்.