குஜராத்தில் நரேந்திர மோடி முதல்வராக இருந்த காலத்தில் அங்கு நடைபெற்ற ஹோத்ரா ரயில் நிலைய ரயில் எரிப்பு கலவரத்தில் 700க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். மேலும் ஐந்து மாத கர்ப்பிணியான பில்கிஸ் பானு கொடூரமாக கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டதுடன் அவரது வயிற்றிலிருந்த குழந்தையை எடுத்து எரித்துக் கொன்றனர் . மேலும் அவரது குடும்பத்தாரும் படுகொலை செய்யப்பட்டனர்.
இவ்வழக்கில் குற்றவாளிகளான 11 பேருக்கும் 2008ல் ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டு அவர்கள் சிறையில் இருந்து வந்தனர். இந்நிலையில் ஹோத்ரா வழக்கு தொடர்பாக குஜராத் அரசு சிறப்புக் குரு அமைத்தது. அந்த சிறப்பு குழுவின் பரிந்துரையின் படி ஆகஸ்ட் 15ல் 11 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். குற்றவாளிகளின் விடுதலைக்கு ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பதிவிட்ட ட்விட்டர் பதிவில் "ஐந்து மாத கர்ப்பிணி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகள் சுதந்திர தின விழாவின் போது விடுதலை செய்யப்பட்டுள்ளனர் . பிரதமர் மோடியின் சொல்லுக்கும் செயலுக்கும் உள்ள வித்தியாசத்தை நாடே பார்க்கிறது" எனக் கண்டனம் தெரிவித்துள்ளார்.