Skip to main content

தொடர்ச்சியாக விபத்து -தமிழக செய்தித்துறை அதிகாரிகள் பீதி!

Published on 08/06/2020 | Edited on 08/06/2020

 

car


தமிழக அரசின் செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறைக்கு இது போதாத காலம் போலிருக்கிறது! மக்கள் தொடர்பு அலுவலர்கள் பலரும் விபத்தில் சிக்கித் தப்பித்து வருகிறார்கள். இதனால், அரசின் பணிகளைக் கவனிப்பதற்காக வெளியில் செல்ல அலுவலர்களிடம் அச்சம் சூழ்ந்திருக்கிறது!
 

         
தமிழக அரசின் ஒவ்வொரு ஒவ்வொரு நடவடிக்கைகளையும் மக்களிடம் கொண்டு செல்லும் முக்கியப் பொறுப்பில் இருக்கிறார்கள் மக்கள் தொடர்பு அலுவலர்கள் (பி.ஆர்.ஓ.க்கள்). ஒரு நாளைக்கு சுமார் 18 மணி நேரம் விழிப்புடன் இருக்க வேண்டிய பொறுப்பில் இவர்கள் இருக்கின்றனர். இந்த கரோனா காலத்தில் மேலும் பல பணிகளைச் சுமந்து வருகின்றனர். அப்படிப்பட்ட பி.ஆர்.ஓ.க்களுக்கு தற்போது நேரம் சரியில்லை! வாகனங்களில் செல்லும் போது ஆக்சிடெண்டில் சிக்கிக் கொள்கிறார்கள் பி.ஆர்.ஓ.க்கள்! 
               
நீலகிரி மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் இளங்கோவன், அலுவல் பணி நிமித்தம் இரு சக்கர வாகனத்தில் பெருந்துறை சென்று விட்டு ஊட்டி திரும்பும் வழியில் விபத்து ஏற்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். உடல் நலம் தேறியிருந்தாலும் தற்போது வரை ஐ.சி.யூ.வில் இருக்கிறார். 
 

                  
நெல்லை மாவட்ட பி.ஆர்.ஓ. செந்தில், இரு சக்கர வாகனத்தில் வலங்கைமான் சென்று விட்டு மீண்டும் நெல்லைக்குத் திரும்பும் வழியில் விபத்தில் சிக்கினார். தஞ்சையிலுள்ள மதுரை மிஷன் மருத்துவமனையில் ஐ.சி.யூ.வில் சேர்க்கப்பட்டார் செந்தில். டாக்டர்களின் தீவிர சிகிச்சையில் குணமடைந்து வருகிறார். ஐ.சி.யூ.விலிருந்து இன்னும் டிஸ்சார்ஜ் ஆகவில்லை ! 
                  
சேலம் மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் அண்ணாதுரைக்கு ஏற்பட்ட வாகன விபத்தில், கால் எலும்பு விரிசல் கண்டது. தீவிர சிகிச்சையளிக்கப்பட்டதில் குணமடைந்து வருகிறார் அண்ணாதுரை. 
                        
செங்கல்பட்டு மாவட்ட உதவி மக்கள் தொடர்பு அலுவலராக இருக்கிறார் ராஜகணேஷ். இவரும் சமீபத்தில் வாகன விபத்தில் சிக்கி, மருத்துவச் சிகிச்சைக்குப் பின் தற்போது மருத்துவ விடுப்பில் வீட்டில் இருக்கிறார்.   
        

http://onelink.to/nknapp


சென்னையில் கூடுதல் இயக்குநராக உள்ள அம்பலவாணன், மக்கள் தொடர்பு அலுவலர் தமிழ்ச்செல்வன், புகைப்படக்காரர் விஜய் ஆகியோர், பொலேரோ ஜீப்பில் சென்றபோது விபத்தில் சிக்கினர். சிறு காயங்களுடன் அவர்கள் தப்பித்தனர். மருத்துவச் சிகிச்சை எடுத்துக்கொண்டதற்குப் பிறகு தற்போது அலுவலகம் வந்து போகின்றனர். 
                         
தமிழக செய்தித் துறையின் முக்கியப் பொறுப்புகளில் இருக்கும் அலுவலர்களுக்கும் அதிகாரிகளுக்கும் தொடர்ச்சியாக விபத்து ஏற்படுவது கண்டு, செய்தித்துறை அதிகாரிகள் அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள். 


 

சார்ந்த செய்திகள்