தமிழகத்தில் 5000 இடங்களில் போராட்டம் நடத்த இருப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழகத்தில் சில அரசியல் கட்சிகள் தேச விரோதமாக சில விஷயங்களைப் பேசுவதைப் பார்த்துக் கொண்டுள்ளோம். அதில் முதலாவதாக பாதுகாப்புப் பணியிலிருந்த ராணுவ வீரரை அச்சுறுத்தி, ‘உங்கள் குடும்பத்தினர் இங்கு இருக்கிறார்கள்.. பார்த்துக்கிறோம்’ என்று சொல்லும் அளவிற்கு இங்கு சட்டம், ஒழுங்கு இருக்கிறது.
எந்தப் பிரச்சனையானாலும் என் செல் நம்பரை தொடர்பு கொண்டு என்னை கூப்பிடலாம். எந்த உதவியாக இருந்தாலும் தமிழகத்தில் அதை செய்ய பாரதிய ஜனதா கட்சி கடமைப்பட்டுள்ளது எனச் சொன்னேன்.
சுற்றுப்பயணம் என்று சொல்வதை விட தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களையும் சந்திக்க வேண்டும். குறிப்பாக எல்லா கிராமங்களுக்கும் செல்ல வேண்டும். அந்தக் கிராமத்தில் உள்ள மனிதர்களைச் சந்திக்க வேண்டும். மத்திய அரசின் திட்டங்கள் எந்த அளவிற்கு சென்றுள்ளது எனப் பார்க்க வேண்டும். கிட்டத்தட்ட ஒரு வருட காலத்தில் இந்தப் பயணத்தை ஆரம்பித்து முடித்துவிட வேண்டும் என்பது ஆசை. அதற்காக ஒரு குழுவினை அமைத்து ஆரம்பக்கட்டப் பணிகள் நடைபெற்றுக் கொண்டுள்ளது.
கட்சிக்கு ஒரு குறிக்கோள் கொடுத்துள்ளோம். தமிழகத்தில் அடுத்து நடக்கும் போராட்டம் 5000 இடங்களில் இருக்க வேண்டும் என்று. இது கட்சிக்கு இருக்கும் சவாலும் கூட” எனக் கூறினார்.