Skip to main content

பிரணாப் முகர்ஜியை பிரதமர் வேட்பாளராக நிறுத்த ஆர்.எஸ்.எஸ். திட்டம்: கி.வீரமணி

Published on 11/06/2018 | Edited on 11/06/2018


 

Mohan Bhagwat and Pranab Mukherjee


மேனாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை ஆர்.எஸ்.எஸ். சிறப்புக் கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக ஆர்.எஸ்.எஸ். அழைத்ததன் பின்னணி - 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பா.ஜக. வெற்றி பெற வாய்ப்பு இல்லை என்ற நிலை தெளிவான சூழ்நிலையில், பிரணாப் முகர்ஜியை பிரதமருக்கான பொது வேட்பாளராக நிறுத்திட ஆர்.எஸ்.எஸ். -- பா.ஜ.க. உருவாக்கிய திட்டம் என திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி கூறியுள்ளார்.
 

இதுதொடர்பாக கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
 

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு ஆர்.எஸ்.எஸ். தமது நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு அழைப்பு விடுத்ததும், அதுபற்றி காங்கிரஸ் முக்கிய தலைவர்கள் தரப்பிலிருந்து அந்த அழைப்பை முகர்ஜி ஏற்றதைப்பற்றி விமர்சனக் கருத்துக்கள் வெளியானதும், பிறகு அங்கே பிரணாப் முகர்ஜி சென்று ஓநாயை சைவமாக்கும் மலைப்பிரசங்கம் செய்து விட்டுத் திரும்பியது பற்றியும் நமக்கு அதிர்ச்சியோ, வியப்போ ஏற்படவில்லை.
 

பிரணாப் முகர்ஜியின் உண்மை உருவம் என்ன?
 

காரணம், பிரணாப் முகர்ஜி, காங்கிரஸ்காரர் - முற்போக்குவாதி போர்வை அணிந்த இந்துத்துவ மனப்பான்மையாளர் - காஞ்சி சங்கராச்சாரியார்களின் அத்தியந்தசீடர்  - பல சாமியார்களின் ஆசியால்தான்  பதவிகள் தனக்கு வந்தன என்ற கருத்து உடையவர் என்பது உலகறிந்த உண்மையாகும்!

 

 

 

அவர் தனது அரசியல் பயணம்பற்றி ‘The Coalition years’ 1996-2012 என்று எழுதி, சென்ற ஆண்டு 2017 இறுதியில் டில்லியில் வெளியிட்ட ஆங்கில நூல் -  பக்கங்கள் 208-209களில் “Nothing exemplifies my temper more than the episode that involved the arrest of Jayendra Saraswati, the Shankaracharya of Kanchi, on 12 November 2004. It was a time when the entire country was celebrating Diwali. During the Cabinet meeting, I was extremely critical of the timing of the arrest and questioned if the basic tenets of secularism of the Indian state were confined to only Hindu monks and seers? Would the state machinery dare to arrest a Muslim cleric during Eid festivities? M.K.Narayanan, then Special Adviser to Prime Minister, also agreed with me. I immediately issued instructions for the Shankaracharya to be released on bail.”

அதன் தமிழாக்கம் வருமாறு:
 

2004ஆம் ஆண்டு நவம்பர் 12 அன்று காஞ்சி சங்காராச்சாரியார் ஜெயேந்திர சரசுவதி கைது படலத்தில் வேறு எப்போதும் இல்லாமல், என்னுடைய மனநிலை விளக்க முடியாத அளவில் இருந்தது. அந்த நேரம் நாடுமுழுவதும் தீபாவளி கொண்டாடப்பட்டது.
 

கைது நடைபெற்ற மிகவும் நெருக்கடியான நேரத்தில், அமைச்சரவைக் கூட்டத்தில்  கடுமையான விமர்சனத்தை முன்வைத்தேன். இந்து மத சாமியார்களை, மடாதிபதிகளை கைது செய்வது மட்டுமே மதச்சார்பின்மையின் அடிப்படையான கருத்தா? என்று கேள்வி எழுப்பினேன். மாநில அரசு இதுபோன்று முசுலீம் மதக் குருமாரை  ஈத் விழாக்களின்போது கைது செய்யத் துணியுமா? என்று கேள்வி எழுப்பினேன். பிரதமரின் சிறப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் என் கருத்தை ஆமோதித்தார். சங்கராச்சாரியாரை பிணையில் விடுவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தலை நான் உடனடியாகப் பிறப்பித்தேன்.

 

k.veeramani dk

 
கன்னியாகுமரியில் உள்ள பார்ப்பனர்களுக்குத் தேள் கொட்டினால்...
 

மத்திய உள்துறை அமைச்சராக இருந்த இவர் எவ்வளவு இந்துத்துவ வெறி கொண்ட பார்ப்பனர் என்பது  -  பூனைக்குட்டி வெளியே வந்ததுபோல இதன் மூலம் வெளிவந்து விட்டதே! இவர் கதருக்குள்ளே போர்த்தி  இருப்பது காவிதான் என்று நாட்டோருக்கு விளங்க வைத்து விட்டாரா இல்லையா? நாம் பல கூட்டங்களில் இந்நூலிலிருந்து படித்துக் காட்டி அப்போதே பெரியார் சொன்னது எத்தகைய மறுக்க முடியாத அனுபவ உண்மை - கன்னியாகுமரியில் உள்ள பார்ப்பானுக்குத் தேள் கொட்டினால், இமயமலையில் இருக்கும் பார்ப்பானுக்கும் நெறிகட்டும் என்ற தந்தை பெரியாரின் கூற்றினை இந்த இடத்தில் பொருத்திப் பார்க்கட்டும் - உண்மை விளங்கும்.
 

ஒரு கொலைக் குற்றவாளி,  தான் கைதாவதிலிருந்து தப்பி மற்றொரு நாட்டுக்குச் செல்லும் முயற்சிகளை தமிழகக் காவல்துறை - உளவுத்துறை மூலம் அறியும்போது உடனடியாக கைது செய்யாமல் அது  பண்டிகை நாள் என்றா பார்த்து பஞ்சாங்கத்தைப் புரட்டிட வேண்டுமா? என்னே பார்ப்பன இந்துத்துவ பாசம் இவருக்கு! அதைவிட அதிர்ச்சியூட்டக் கூடிய மற்றொரு தகவல் இவரது வாக்கு மூலத்திலிருந்து வெளியாகி உள்ளது!
 

கைதானவரை ஜாமீனில் விடும்படி உள்துறை அமைச்சர் பதவியை அவர் பயன்படுத்தினேன் என்று ஒப்புதல் வாக்குமூலம் தந்துள்ளது - சட்டப்படி நீதித்துறையில் தலையிட்ட குற்றமல்லவா? மனுதர்ம சட்டமா அப் போது நடைமுறையில் இருந்தது? இல்லையே - இந்திய அரசியல் சட்டமல்லவா?

 

 

 

டில்லியில் அப்போது பார்ப்பன வெங்கட்ராமன் மேனாள் குடியரசுத் தலைவர் - உண்ணாவிரதத்தில் உட்கார்ந்து அப்பதவியின் பாரம்பரிய மாண்பையும், மரியாதையையும் குறைக்கவில்லையா?
 

பிரணாப் மகளே சுட்டிக்காட்டியுள்ளாரே!
 

ஆர்.எஸ்.எஸ். அமைப்பு இத்தகைய தகுதிகளால் தான் பிராணப் முகர்ஜியை அதன் தலைமையகத்திற்கு அழைத்துள்ளது!

இவர் அங்கேபோய் செய்த பிரசங்கம் ஒரு நாள் செய்தி மட்டுமே;  இவர் ஹெட் கேவருக்கு செலுத்திய மரியாதை, ஆர்.எஸ்.எஸ். முக்கியத் தலைவர் மோகன்பகவத் பக்கத்தில் அமர்ந்திருந்த படம் - போஸ் கொடுத்ததுதான் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துக்கு அப்பாவி மக்களை ஏமாற்றிட முக்கியத் தேவையாகும். அதை ஆர்.எஸ்.எஸ்.  அடைந்து விட்டதே! (இதை இவரது மகளான சர்மிஷ்தா முகர்ஜியே நன்றாக சுட்டிக் காட்டியுள்ளார்!).
 

பிரணாப் முகர்ஜி பா.ஜ.க.வின் பொது வேட்பாளரா?
 

இதையெல்லாம்விட நேற்றைய (10.6.2018) டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேட்டில் வந்துள்ள ஒரு செய்தி, மற்றொரு ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க.வின் ரகசிய திட்டத்தை அம்பலப்படுத்தி யுள்ளது.
 

அச்செய்தி வருமாறு:

 

 

 

அவர்களது கூட்டணி கட்சியான சிவசேனாவின் அதிகாரபூர்வ ஏடான சாமன்னா என்ற மராத்தி வார ஏடு, வருகின்ற 2019ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் பா.ஜ.க. மோடி அரசு மீண்டும் பதவிக்கு வர போதிய பெரும்பான்மை பெற வாய்ப்பில்லையென்றால், ஒரு பொது வேட்பாளர் என்ற போர்வையில் பிரணாப் முகர்ஜியைக் கொண்டு வரு வதற்குத்தான் இந்த முன் திட்ட ஏற்பாடு என்று டில்லி வட்டாரங்களில் பேச்சுகள் அடிபடுகின்றன என்று ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது. உண்மையான காங்கிரஸ்காரர்கள் - மதச் சார்பின்மை, சமூகநீதி, பன் முகக் கலாச்சாரத்தில் ஆழ்ந்த நம்பிக் கையாளர்கள் பசுத்தோல் போர்த்திய இத்தகையவர்களை  அடையாளம் காணுவது அவசரம் - அவசியம்! இவ்வாறு கூறியுள்ளார்.


 

சார்ந்த செய்திகள்