Skip to main content

வாரிசு அரசியலா? வைகோ பரபரப்பு பேட்டி!

Published on 09/07/2019 | Edited on 09/07/2019

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுக இடம் பெற்றது. கூட்டணியில் ஒரு மக்களவைத் தொகுதியும், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டது. இந்த நிலையில் தமிழகத்தில் காலியாக உள்ள மாநிலங்களவைத் தேர்தல் பதவிகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வேட்புமனு தாக்கல் செய்தார். இதனிடையே வைகோவுக்கு தேச துரோக வழக்கில் 1 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டதால் அவர் தேர்தலில் நிற்பதில் சிக்கல் ஏற்படலாம் என்று கூறப்பட்டு வந்த நிலையில், இன்று அவரது வேட்புமனுவை ஏற்பதாக சட்ட பேரவை செயலர் அறிவித்தார். 
 

mdmk



வேட்பு மனு ஏற்கப்பட்டது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த வைகோவிடம் மதிமுகவில் வாரிசு அரசியல் இருக்கிறதா என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு மதிமுக கட்சியில் எப்போதும் வாரிசு அரசியல் இருக்காது. ஒரு சில பத்திரிக்கைகளில் எனது வேட்புமனு ஏற்கப்படவில்லை என்றால் எனது மகனை ராஜ்யசபா சீட்டுக்கு போட்டியிட வைக்க போவதாக போட்டிருந்தனர்.அது முற்றிலும் தவறான செய்தி எனது குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள், எனக்கு பக்க பலமாக இருக்கிறாரகளே தவிர, அவர்கள் போட்டியிடவில்லை என்று கூறினார். மேலும் கட்சியில் உள்ள உயர்மட்டக் குழு நிர்வாகிகளிடம் கலந்து ஆலோசித்த பிறகு தான் எல்லா முடிவுகளும் எடுக்கப்படுகின்றன என்றும் தெரிவித்தார். மேலும் என்னுடைய வேட்புமனு ஏற்கப்பட்டதற்கு எனது கட்சி தொண்டர்களுக்கு மட்டுமின்றி கட்சி சாராதவர்களும் மகிழ்ச்சியில் இருக்கின்றனர் என்றும் கூறினார்.     

சார்ந்த செய்திகள்