Skip to main content

பொன்.ராதாகிருஷ்ணனின் தம்பியாக கோபப்பட்டேன்... அதிரவைத்த சீமான்

Published on 09/04/2019 | Edited on 09/04/2019

 

கன்னியாகுமரி நாடாளுமன்ற நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரை ஆதரித்து சீமான் பிரச்சாரம் மேற்கொண்டார்.

 

அப்போது அவர், ''கடந்த பாராளுமன்றத் தேர்தலில் பாஜகவின் சார்பில் தமிழகத்தில் வென்று ஒரே ஒரு தமிழனாக பொன்.ராதாகிருஷ்ணன் டெல்லிக்கு போனார். அந்த தமிழனுக்கு என்ன மரியாதை அளித்தீர்கள். அவருக்கு மானம், ரோசம் இருந்து கோபப்பட்டாரோ இல்லையோ, நான் கோபப்பட்டேன். பொன்.ராதாகிருஷ்ணனின் தம்பியாக கோபப்பட்டேன். 


 

Kanyakumari



தேர்தலையே சந்திக்காத நிர்மலா சீத்தாராமனுக்கு கேபினெட் அமைச்சர் பொறுப்பு கொடுக்கிறீர்கள். மக்களை சந்தித்து வென்றவரை கடைசி வரைக்கும் இணை அமைச்சராகவே வைத்திருக்கிறீர்கள். என்ன மரியாதை கொடுக்கிறீர்கள். தேர்தலில் போட்டியிடவே இல்லை நிர்மலா சீத்தாராமன். தேர்தலில் ஒன்றரை லட்சம் வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தவர் அருண் ஜெட்லி. அவருக்கு நாட்டின் உயரிய பதவிகளில் ஒன்றான நிதி அமைச்சர் பதவியை கொடுத்துள்ளீர்கள். அவர் ஒரே நாளில் பணம் செல்லாது என்கிறார். ஒரே நாளில் 28 விழுக்காடு ஜி.எஸ்.டி. வரி என்கிறார்.




 

தேர்தலை சந்தித்து வென்றவருக்கு கடைசி வரைக்கும் இணை அமைச்சர் பதவி. மக்களையே சந்திக்காதவருக்கு கேபினெட் அமைச்சர் பதவி. இது என்ன மாதிரியான அணுகுமுறை? இது என்ன மாதிரியான ஒரு கட்டமைப்பு? இதுதான் தமிழர்களுக்கு பாஜக கொடுக்கும் மதிப்பு. இவ்வாறு பேசினார். 
 

 

 

சார்ந்த செய்திகள்