Skip to main content

திமுகவிற்கு 1000 ஏக்கர் நிலம் தருகிறேன்... பாமக நிறுவனர் ராமதாஸ் சவால்!

Published on 20/11/2019 | Edited on 20/11/2019

முரசொலி அலுவலம் உள்ள இடம் பஞ்சமி நிலத்தைச் சேர்ந்தது என சமீபத்தில் சர்ச்சை எழுந்தது. இந்த விவகாரம் தொடர்பாக பாஜக மாநிலச் செயலாளர் சீனிவாசன் தேசிய பட்டியலின ஆணையத்திடம் புகார் அளித்தார். இது தொடர்பாக அதிமுக தரப்பிலும் பலர் கருத்துக்களை தெரிவித்து வந்தனர். திமுக தலைவர் ஸ்டாலினும், பஞ்சமி நிலத்தில்தான் முரசொலி அலுவலம் இருக்கிறது என்பதை நிரூபிக்க முடியுமா என கேள்வி எழுப்பியிருந்தார். மு.க.ஸ்டாலினின் வளர்ச்சி பிடிக்காமல் அரசியல் ரீதியாக அவதூறு பரப்புகின்றனர் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்து இருந்தார். மேலும் முரசொலி நிலம் பஞ்சமி நிலத்தில் இல்லை என்பது உறுதியாகி விட்டதாகவும் இந்த பிரச்சனையை எழுப்பிய டாக்டர் ராமதாஸ் அவர்களின் ஆயிரம் ஏக்கர் நிலம் யாருடைய பெயரில் இருக்கிறது என்பது குறித்து விரைவில் வெளியிட இருப்பதாகவும் கூறியிருந்தார்.   

 

 

pmk



இது தெடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் கருத்து ஒன்றை இது சம்மந்தமாக கூறியுள்ளார். அதில், முரசொலி நிலத்தின் மூலப்பத்திரத்தை அதன் நிர்வாகம் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திடம் இன்றும் தாக்கல் செய்யவில்லை.மாறாக ஆணையத்துக்கே மிரட்டல் விடும் வழக்கமான வேலையை தான் திமுக செய்திருக்கிறது. மிரட்டல் விடுப்பதை விடுத்து மூலப்பத்திரத்தை காட்டுங்கள்.அது தான் அறம்.அது தான் நேர்மை. மேலும் முரசொலி விவகாரத்தில் குற்றமற்றவர்கள் என நிரூபிக்க முடியாத திமுக, அச்சிக்கலை எழுப்பிய மருத்துவரின் 1000 ஏக்கர் குறித்து தெரிவிக்கப் போவதாக கூறியுள்ளது. சவாலை ஏற்கிறேன். எனது 1000 ஏக்கர் குறித்த விவரத்தை கூறட்டும். அப்படி ஒரு நிலம் இருந்தால் அதை அவர்களுக்கே கொடுத்து விடுகிறேன் என்றும் கூறியுள்ளார். 
 

 

சார்ந்த செய்திகள்