‘‘யார் இந்த அரசியல் அதிசய மனிதர்?’’ விரைவில் முகநூலில் புதிய புதிர். கண்டுபிடிக்கக் காத்திருங்கள்!
— Dr S RAMADOSS (@drramadoss) June 3, 2020
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றைப் பதிவிட்டு இருந்தார். அதில், தி.மு.க. தலைவர் கலைஞரும், நானும் அவரது இல்லத்தில் ஒரு நாள் தனியாக உரையாடிக் கொண்டிருந்தோம். அப்போது ஒரு மூத்த அரசியல்வாதியின் பெயரைக் குறிப்பிட்ட கலைஞர், அவரை மட்டும் எந்தக் காலத்திலும் நம்பி விடாதீர்கள் என்று கூறினார். அவர் யார் என்பதை உங்களின் யூகத்துக்கே விட்டுவிடுகிறேன் என்று கூறினார். அதன் பின்பு கலைஞர் குறிப்பிட்டது அ.தி.மு.க., தி.மு.க., தி.க., ம.தி.மு.க., தே.மு.தி.க., பா.ஜ.௧., காங்கிரஸ், பொதுவுடைமை இயக்கங்கள், வி.சி.க., ஆகிய கட்சிகளின் தலைவர்கள் பெயர்களையோ, மறைந்த தலைவர்களின் பெயர்களையோ அல்ல! என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் மீண்டும் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அதில், யார் இந்த அரசியல் அதிசய மனிதர்? விரைவில் முகநூலில் புதிய புதிர். கண்டுபிடிக்கக் காத்திருங்கள் என்றும், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பின்தங்கிய தன்மைகொண்ட சமுதாயங்களுக்கு பிரதிநிதித்துவம் அளிப்பதை இடஒதுக்கீடு என்றே இதுவரை கூறி வருகிறோம். அதைவிட இடப்பங்கீடு என்ற சொல்தான் சமூக நீதிக்கு நெருக்கமாக இருக்கும் எனக் கருதுகிறேன். இனி இடப்பங்கீடு என்ற சொல்லையே பயன்படுத்துவோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.