வரும் மே 19ஆம் தேதி தமிழகத்தில் அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம், சூலூர், திருப்பரங்குன்றம் ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. தமிழகத்தி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் தேர்தலாக இந்த இடைத்தேர்தல் பார்க்கப்டுகிறது இதனால் திமுக, அதிமுக ஆகிய காட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் இடைத் தேர்தல் தொகுதிகளில் தி.மு.க. தலைவர் ஸ்டாலினின் நேரடி வாக்குசேகரிப்பு, ஆளும்கட்சிப் பிரச்சாரத்தை விட மக்கள் மத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திக்கிட்டு இருக்கிறது என்று அந்த தொகுதி மக்களும் அரசியல் வட்டாரங்களும் தெரிவிக்கின்றன.

இது பற்றி எடப்பாடியிடம் அ.தி.மு.க. புள்ளிகள் பேசியதோடு, தங்கள் கூட்டணிக் கட்சிகளை, குறிப்பா தே.மு.தி.க.வை பிரச்சாரத்தில் இறக்கணும்னு கேட்டிருக்காங்க. இதைத் தொடர்ந்து, அ.தி.மு.க. தலைமை விஜயகாந்த் மைத்துனர் சுதீஷைத் தொடர்பு கொண்டிருக்கு. அவர் பிரேமலதாவிடம் பேச, கேப்டனை பக்கத்திலேயே இருந்து கவனிக்க வேண்டியிருக்கே. சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு அழைச்சிக்கிட்டுப் போயாகணுமேன்னு தயங்கிருக்காரு.
அதைப் பார்த்த விஜயகாந்த், கூட்டணி தர்மப்படி அந்த நான்கு தொகுதிகளுக்கும் போய் பிரச்சாரம் செய்வதுதான் சரி. நான் நல்லாதான் இருக்கேன். நீ போய் பிரச்சாரம் பண்ணுன்னு பிரேமலதாவுக்கு உத்தரவு போட்டாராம். அதனால், தொகுதிக்கு ஒரு நாள் வீதம், மே 13-லிருந்து 4 நாட்கள், தனது அதிரடி பாணித் தேர்தல் பிரச்சாரத்துக்குக் கிளம்ப இருப்பதாக செய்திகள் வருகின்றன.அதிமுகவில் மக்களை கவரும் வகையில் பிரச்சாரம் செய்ய தலைவர்கள் இல்லாதது பெரும் பின்னடைவாக இந்த தேர்தலில் பார்க்கப்படுகிறது.