தமிழ் நாட்டில் ஊரகப் பகுதிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் கடந்த மாதம் 27, 30 என 2 தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற்றது.நடத்தப்பட்ட இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் ஜனவரி இரண்டாம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருந்த நிலையில், இன்று வாக்குகளை எண்ணும் பணி துவங்கியுள்ளது. தமிழகம் முழுவதும் 315 மையங்களில் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.இந்த நிலையில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்களின் விவரங்களை மாவட்டம் வாரியாக தெரிவித்து வருகின்றனர்.
![dmk](http://image.nakkheeran.in/cdn/farfuture/p5xhZlcrtdf6ydz6ahQRV6vYxguDbaRclsV2rEjPL-w/1578026626/sites/default/files/inline-images/177_2.jpg)
இந்த நிலையில் ஒன்றிய கவுன்சிலர் 5090 இடங்களில் திமுக பெரும்பான்மை இடங்களில் அதிமுகவை விட முன்னணியில் உள்ளது. அதே போல் மாவட்ட கவுன்சிலர் 515 இடங்களில் தற்போதைய நிலவரப்படி திமுக பெரும்பான்மை இடங்களில் முன்னணி வகித்து வருகிறது. ஜனவரி 3ஆம் தேதி (இன்று) 10.00 மணி நிலவரப்படி ஊரக உள்ளாட்சி தேர்தலில் மாவட்ட கவுன்சிலரில் திமுக 256 இடங்களை பெற்று அதிக இடங்களில் திமுக கூட்டணி முன்னணியில் உள்ளனர். அதே போல் ஒன்றிய கவுன்சிலரில் 2171 இடங்களை பெற்று முன்னிலையில் உள்ளனர். இதனால் அதிமுக மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்கள் பெரும்பான்மையான இடங்களில் பின்னடைவில் உள்ளனர். அதோடு, அதிமுக ஆட்சியில் இருந்தும், அதிக அளவு செலவு செய்தும் போதிய இடங்களில் அதிமுக முன்னிலை பெறாமல் இருப்பதால் வேட்பாளர்கள் அதிருப்தியில் உள்ளனர்.