





Published on 04/02/2019 | Edited on 04/02/2019
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுபவர்களிடம் இன்று விருப்ப மனுக்கள் பெறுவது இன்று காலை தொடங்கியது. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இதனை தொடங்கி வைத்தனர்.
இதனை தொடர்ந்து 10.30 மணி அளவில் ஜெயலலிதா பேரவை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாநில செயலாளரும், அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் தலைமையில் நடந்தது. ஜெயலலிதா பிறந்த நாள் விழாவை சிறப்பாக கொண்டாடுவது குறித்து ஆலோசிப்பதற்காக இந்த கூட்டம் நடந்தது. அமைச்சர்கள் ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி, மற்றும் அவைத்தலைவர் மதுசூதனன், கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், பொன்னையன், வளர்மதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.