Skip to main content

டிடிவியால் ஓட்டு சிதறும் என்பதால் மகனுக்காக களமிறங்கும் ஓ.பி.எஸ்.!

Published on 18/03/2019 | Edited on 18/03/2019

 

    தேனி பாராளுமன்ற தொகுதி துணை முதல்வர் ஓ.பி.எஸ். மகன் மூலம் வி.ஐ.பி. தொகுதியாக உருவாகிவிட்டது. தேனி மாவட்டத்தில் உள்ள போடி, பெரியகுளம், கம்பம், ஆண்டிப்பட்டி ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளும் மதுரை மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டி, சோழவந்தான் ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதிகளும் சேர்ந்ததுதான் தேனி பாராளுமன்ற தொகுதி. 
 

இந்த தேனி பாராளுமன்ற தொகுதியில் முக்குலத்தோர் பிரிவில் உள்ள பிரமலைக்கள்ளர் சமூகத்தினர் தான் பெரும்பான்மையானோர் உள்ளனர். அதற்கு அடுத்தபடியாக தாழ்த்தப்பட்ட சமூகத்தினர், மறவர், நாயக்கர், கவுண்டர், செட்டியார், நாடார் உள்பட சில சமூகத்தினருடன் கிறிஸ்தவர், முஸ்லீம் மக்களும் கனிசமாக வாழ்ந்து வருகிறார்கள். 

 

ops


 

கடந்த தேர்தலின் போது ஜெ.விடம் ரவீந்திரநாத்துக்கு ஓ.பி.எஸ். சீட் கேட்டார். ஆனால் ஜெ.வோ ஓ.பி.எஸ்.-யின் ஆதரவாளரான பார்த்திபனுக்கு சீட் கொடுத்ததின் மூலம் பார்த்திபனுக்கு வேஷ்டி, சட்டை முதல் வாங்கிக் கொடுத்து ஓ.பி.எஸ். வெற்றி பெற வைத்தார். 
 

தற்போது ஜெ. இல்லாததாலும், கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பி.எஸ்.சே இருப்பதால் ரவீந்திரநாத்திற்கு சீட் கொடுத்து இருக்கிறார். அதைக்கண்டு ஓ.பி.எஸ். ஆதரவாளர்களும், ஓ.பி.எஸ். சமூகத்தினர்தான் உற்சாகமாக இருக்கிறார்களே தவிர பெரும்பாலான கட்சிக்காரர்கள் மற்றும் மற்ற சமூகத்தினர் எந்த ஒரு ஆர்வமும் காட்டவில்லை. 
 

ஏற்கனவே 2004ல் டிடிவி போட்டியிட்டு தோல்வியை தழுவினார். அதன்பின் 2009ல் தங்கத்தமிழ்ச்செல்வன் போட்டியிட்டும் தோல்வியை தழுவினார். இத்தொகுதியில் தங்கள் சமூகத்தினர் பெரும்பான்மையாக இருந்தும் கூட தங்கள் தோல்விக்கு ஓ.பி.எஸ். தான் காரணம். ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் ஓட்டு போடததுனாலதான் டிடிவியும், நானும் தோற்றோம் என தங்கத்தமிழ்ச்செல்வனே வெளிப்படையாக சொன்னார்.  
 

இந்த நிலையில், சமூக மக்கள் ஓட்டு வங்கி கை கொடுக்க தயாராக இருக்கிறது என்பதால் ஓ.பி.எஸ்., தன் மகன் ரவீந்திரநாத்தை தேர்தல் களத்தில் இறக்கியுள்ளார். இதற்காக தனது ஆதரவாளர்களுக்கு கட்சி பொறுப்புகளை வழங்கியுள்ளார். இருந்தாலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் முன்னாள் அமைச்சர் துரைராஜின் மகன் தனசேகரனை களத்தில் இறக்க டிடிவி தயாராகி வருவதின் மூலம் ஓட்டுக்கள் சிதற போகிறது என்ற பீதியில் ஓ.பி.எஸ். இருந்து வருகிறார்! 

 

 

 

சார்ந்த செய்திகள்