Skip to main content

கட்சி,ஆட்சி இரண்டுக்குமே ஓபிஎஸ் தலைமை?

Published on 13/06/2019 | Edited on 13/06/2019

நேற்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அதிமுக தலைமையகத்தில் நடைபெற்றது.அப்போது 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.அப்போது அதிமுக பற்றி யாரும் ஊடகங்களுக்கு பேட்டி கொடுக்க கூடாது என்றும்,தற்போதைய சூழ்நிலையில் இரட்டை தலைமை முறையே இருக்கும் என்றும் முடிவெடுக்கப்பட்டது.இந்த கூட்டம் நடைபெறுவதற்கு முன்பு அடுத்த பொதுச்செயலாளர் எடப்பாடி தான் என்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தது.இதே மாதிரி சிவகங்கை மாவட்டத்தில் அடுத்த பொதுச்செயலாளர் செங்கோட்டையன் தான் என்று ஒட்டப்பட்டது.இதனால் அதிமுகவில் மீண்டும் குழப்பங்கள் வந்தன.
 

ops



இந்த போஸ்டர்களால் அதிமுக தலைமை அதிர்ச்சி அடைந்ததாக சொல்லப்படுகிறது.இந்த அதிர்ச்சியிலிருந்து மீளாத அதிமுகவிற்கு இன்று மேலும் ஒரு அதிர்ச்சி அதில் துணை முதல்வர் தான் அடுத்த பொதுச்செயலாளர் என்றும் ஆட்சிக்கும் பன்னீர்செல்வமே தலைமை ஏற்க வேண்டும் என்று போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.இந்த நிலையில் அதிமுகவின் போஸ்டர் யுத்தம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. மேலும் கட்சி, ஆட்சிக்கு தலைமையேற்க வாருங்கள்' என ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஒட்டியுள்ள போஸ்டர்களால் தேனி மாவட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இன்று காலை ஓபிஎஸ்சுக்கு ஆதரவான போஸ்டர்கள் சுவர்களில் ஒட்டப்பட்டு இருந்தன. அதில், 'புரட்சி தலைவி மாண்புமிகு அம்மா அவர்களால் மூன்று முறை முதல்வர் ஆக்கிய, தர்மயுத்த நாயகர் ஓபிஎஸ் ஐயா அவர்களே.. கட்சியையும், ஆட்சியையும் தலைமையேற்க வாருங்கள், இது ஒன்றரை கோடி தொண்டர்களின் விருப்பமாகும். இவண்: தர்மயுத்த தொண்டர்கள்' என குறிப்பிடப்பட்டுள்ளது.இதனால் மீண்டும் அதிமுகவில் உட்கட்சி பூசல் அதிகமாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்