அதிமுகவுக்கு ஒரே தலைமை வேண்டும். இரட்டைத்தலைமை அ.தி.மு.க. எம்எல்ஏ ராஜன் செல்லப்பா கூறினார். ராஜன் செல்லப்பா கூறிய கருத்தையே குன்னம் அதிமுக எம்எல்ஏ ராஜேந்திரனும் கூறியுள்ளார்.
இதையடுத்து தொண்டர்கள் இனி அ.தி.மு.க. நிர்வாக முறைகளைப் பற்றியோ, தேர்தல் முடிவுகளைப் பற்றிய தங்கள் பார்வைகளைப் பற்றியோ, கட்சியின் முடிவுகளைப் பற்றியோ, பொது வெளியில் கருத்துக்களை யாரும் கூறக்கூடாது என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிக்கை வெளியிட்டனர். மேலும் ஜீன் 12ஆம் தேதி அதிமுக எம்எல்ஏக்கள், எம்பிக்களின் ஆலோசனைக்கூட்டம் நடக்க உள்ளதாகவும் அறிவித்திருந்தனர்.
அதன்படி இன்று காலை சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் அனைத்து எம்எல்ஏக்களும் கலந்து கொண்டனர். எம்பிக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அதிமுக தலைமை அலுவலகத்திற்கு முன்பு எடப்பாடி பழனிசாமியே பொதுச்செயலாளராக வரவேண்டும் என்ற போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தது. இந்தக் கூட்டம் பற்றிய செய்திகள் ஊடகங்களில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டது.
இந்த நிலையில் கூட்டத்திற்கு வந்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அனைவருக்கும் ஒரு கட்டளையிட்டனர். கூட்டத்தில் பங்கேற்றவர்கள் யாரும் கூட்டம் நடந்து கொண்டிருக்கும்போது செல்போனை பயன்படுத்தக்கூடாது. இதனை சுவிட்ச் ஆஃப் பண்ண வேண்டும். யாரிடமும் பேசக்கூடாது என்று கூறியுள்ளார்களாம். கூட்டத்தில் விவாதிக்கப்படும் விஷயங்கள் வெளியே செல்வதை தடுக்க அதிமுக நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாம்.