மயிலாடுதுறை பாராளுமன்ற தி.மு.க. வேட்பாளர் ராமலிங்கத்தை ஆதரித்து வாக்கு சேகரித்துப்பேசிய இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், "வருகிற நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது காங்கிரஸ் மற்றும் பா.ஜ.கவிற்கான தேர்தல் போட்டியல்ல. கொள்கை அடிப்படையில் தேச நலன் கருதி யுத்தம் உருவாகி இருக்கிறது.
கடந்த தேர்தலில் பா.ஜ.க. 31 சதவீதம் வாக்குகள் வாங்கி பெருமான்மை ஆதரவான 69 சதவீதம் பெற்ற வாக்கு இல்லாமல், சிறுபான்மை வாக்கு வித்தியாசத்தில் ஆட்சியை பிடித்தது. ஆனால், மனுதர்மத்திற்கு எதிராக யுத்தம் நடத்தி போராடிய காந்தி, அம்பேத்கர், பெரியார், கலைஞர் போன்றவர்கள் வாழ்ந்த மண்ணில் இந்திய அரசியலைப்பு சட்டத்தை சுதந்திரமாக செயல்படவிடமால் தடுக்கும் பாசிச பா.ஜ.கவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும். ஹிட்லர் போல் ஆட்சி நடத்தியவர்கள் தற்கொலை செய்த வரலாறு இந்த மண்ணில் நிகழ்ந்து உள்ளது. பிரதமர் மோடி அம்பேத்கருக்கு வணக்கம் செலுத்துவார். ஆனால் அவரால் உருவாக்கபட்ட சட்டத்தை மதிக்கமாட்டார்.
இந்த மேடையில் இருப்பவர்கள் எல்லாம் இந்துக்கள் இல்லையா, இந்துகளுக்கு நாங்கள் எதிரி கிடையாது இந்துத்துவாவுக்கு தான் நாங்கள் எதிரி. வேற்றுமையில் ஒற்றுமை கண்ட இந்தியாவில் இன்று ஜாதி, மத, மோதலை உருவாக்கி வருகிறன்றனர்.
நாடு பிளவுபட்டு மத கலவரங்கள் ஏற்பட்டது. அப்போது இந்து முஸ்லிம்கள் என இரு தரப்பினர் கொல்லப்பட்டனர். அப்போது அமைதி திரும்பும் வரை மகாத்மா காந்தி போரட்டம் நடத்தினார். அந்த மகாத்மாவை சுதந்திரம் அடைந்து 5 மாதம் 15 நாளில் சுட்டு கொன்றனர். இதற்கு காரணமான இஸ்மாயில் என்று பச்சை குத்திய கோட்சே, தேசபிதா காந்தி இறப்பிற்கு காரணம் இல்லையா?
நடிகர் திலகம் சிவாஜிக்கு அளித்த செவாலியர் பட்டத்தை மோடிக்கு கொடுத்துவிடலாம். அனைத்து தேர்தல் பிரச்சாரமும் மோடியின் நாடகம் அல்லவா? பண மதிப்பிழப்பு, விவசாயிகளுக்கு இரட்டிப்பு வருமானம், வங்கி கணக்கில் ரூ 15 லட்சம் வரும் என எதிர்பார்த்த இந்தியர்களுக்கு கொடுக்கப்பட்டதா இதை எல்லாம் செய்யமால்போன பிரதமர் மோடி அல்லவா.
எந்த எதிர்ப்பு வந்தாலும் 8 வழி சாலையை ரூ 10 ஆயிரம் கோடியில் செயல்படுத்த வேண்டும் அதன் மூலம் 20 சதவீதம் கமிஷன் பெற வேண்டும் என தமிழக முதல்வர் செயல்படுகிறார். ஆனால் உயர் நீதிமன்றம் தடை விதித்தது.
மத்திய அமைச்சர் நிதின் கட்கரி குடும்ப நடத்த தெரியாதவருக்கு நாட்டை வழி நடத்த தெரியாது என்று சொன்னார் உண்மைதான் தற்போது நாட்டை வழி நடத்துபவர்கள் அவர்கள் தான். இவர்கள் ஆட்சி செய்வது கொள்கை கூட்டணி அல்ல கொள்ளை கூட்டணி.
தற்போது எதிர் கூட்டணியில் இருக்கும் தலைவர் 7 சீட் வாங்கி கொண்டு அவரது கட்சியின் இளைஞர்களுக்கு துரோகம் செய்து பணத்தை மட்டும் நம்பி செயல்பட்டு வருகிறார். தமிழகத்தில் சட்ட ஒழங்கு பிரச்சனை இல்லை என்று தேர்தல் பிரச்சாரத்தில் பேசி வரும் தமிழக முதல்வர் பொள்ளாச்சியில் நடைப்பெற்றது சட்ட ஒழுங்கா ? இவர்கள் நடத்துவது சமூக வீரோத சர்கார், தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் அப்பாவிகள் 13 பேரை சுட்டு கொன்றது இந்த அரசு அல்லவா, சமூக ஆர்வலர் முகிலன் காணமால் போய் 2 மாதம் ஆகிறது. இதற்கு பதில் சொல்ல முடியாமல் இருக்கிறது இதுவெல்லாம் சட்டம் ஒழுங்கு பிரச்சனை இல்லையா" என்று பேசினார்.