Published on 13/09/2018 | Edited on 13/09/2018

மதுரை செல்லூரில் உள்ள கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜுவை, அவரது இல்லத்தில் சந்திக்க முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி இன்று காலை செல்கிறார். மு.க.அழகிரியை வரவேற்க செல்லூர் ராஜு ஆதரவாளர்கள் அங்கு தயாராக உள்ளனர்.
செல்லூர் ராஜுவின் தாயார் கடந்த சில தினங்களுக்கு முன்பு காலமானார். இதனையொட்டி துக்கம் விசாரிப்பதற்காக மு.க.அழகிரி அவரது வீட்டிற்கு செல்வதாக அழகிரியின் ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.