மதுரை விமான நிலையத்தில் தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மாபா பாண்டியராஜன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
’’கீழடியில் 4 வது கட்ட அகழ்வாராய்ச்சி வெற்றிகரமாக நடந்துள்ளது. அங்கு கிடைத்த எந்த வித பொருள் பற்றியும் மறைக்கவில்லை. ஆய்வில் கிடைத்த பொருளின் தன்மை ஆகியவை வெளிப்படையாக அறிவிக்கப்படும்.
கடந்த 2 மாதம் நடைபெற்ற ஆய்வு நிறைவு பெற்றுள்ளது . 10 ஏக்கர் பரப்பளவில் ஆய்வு மேற்கொண்டதில் மொத்தம் எவ்வளவு கிடைத்தது என்பதை மக்களுக்கு தெரியபடுத்தப்படும்.
ஆய்வில் புதையல் கிடைக்கவில்லை, சில தங்க ஆபரணங்கள் கிடைத்துள்ளன. எடப்பாடி அரசு இது குறித்து திங்கள் கிழமை சட்டமன்றத்தில் வெளியிடும். கீழடி அகழ்வாராய்சியில் 3வது இடம் உள்ளது.
இதைவிட பெரிய கண்டுபிடிப்புகள் திருவள்ளுரில் 3 லட்சத்து 75 ஆயிரம் வருடம் முந்தைய கற்கால ஆயுதங்கள் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. காலம் மொழி சார்ந்த ஒலியை வைத்து காட்சி படுத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிது. 50 லட்சம் செலவில் ஆய்வு மையம் உருவாக்கி அதனை உலக தரம் மிக்க கள ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்படும்.
14 கோடி செலவில் ஆதிச்ச நல்லூர் , கீழடி உள்ளிட்ட 4 இடங்களில் ஆய்வு செய்த பொருட்களை கொண்டு அருங்காட்சியகம் அமைக்கப்படும்.
முதல்வர், துணை முதல்வர் இருவருக்கும் நல்ல புரிதல் உள்ளது. ராமர், லஷ்மனர் போல் ஒன்றுபட்டு சிறப்பாக செயல்படுகின்றனர். இருவரும் ஒற்றுமையாக 2, 3, 4 தொகுதிகளில் காவிரி வெற்றி விழா கொண்டாட்டம் நடைபெற்றது.
ஸ்டெர்லைட் மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இருவரும் இணைந்தே செயல்படுகின்றனர் . சிறப்பாக வழிநடத்தி வருகின்றனர். சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது’’என்று தெரிவித்தார்.