மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியின் அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள எஸ்.ஆசைமணி திருமருகல் ஒன்றியம் கயத்தூர் , ஏனங்குடி பகுதியை சேர்ந்தவர். தந்தை பெயர் சவுந்தராஜன் , இவருக்கு கலாவதி என்ற மனைவியும், ராஜேஸ்குமார் , அருண்குமார் என்ற இரண்டு மகன்களும், சியாமளா தேவி என்ற மகளும் உள்ளனர். இவர் திருமருகல் ஒன்றிய செயலாளராகவும், ஒருங்கிணைந்த நாகை மாவட்ட அம்மா பேரவை செயலாளராகவும், மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளராகவும் , ஏனங்குடி, ஊராட்சி மன்ற தலைவராகவும், ஒன்றியக் குழு உறுப்பினராகவும். 1991 முதல் 1996 வரை குத்தாலம் சட்டமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார்.
தற்போது கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவராகவும் மாநில கூட்டுறவு வங்கியின் துணைத் தலைவராகவும் உள்ளார். சிட்டிங் மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினரான பாரதிமோகன், தஞ்சை மா,செவான வைத்தியலிங்கத்தின் ஆதரவாளராக இருந்தார் என்பதால் அவரை கட்டம் கட்டி ஓரம்கட்டிவிட்டு ஓ.எஸ். மணியன், தனது ஆதரவாளரான ஆசை மணிக்கே மயிலாடுதுறை தொகுதி பறிந்துரை செய்துள்ளார்.