Published on 06/04/2019 | Edited on 06/04/2019
மதுரை மக்களவை தொகுதியில் திமுக கூட்டணியைச் சேர்ந்த மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர், எழுத்தாளர் சு. வெங்கடேசன் போட்டியிடுகிறார்.

நேற்று காலை, மேலூர் சாலையிலுள்ள எக்கோ பார்க்கில் (eco park) நடைபயிற்சி மேற்கொண்டவாறு வாக்கு சேகரித்தார். அப்போது அந்த பார்க்கிற்கு அமைச்சர் செல்லூர் ராஜூவும் வந்தார். இருவரும் நலம் விசாரித்துக்கொண்டனர். அப்போது வெங்கடேசன் அரிவாள், சுத்தியல் சின்னத்தில் வாக்களியுங்கள் என செல்லூர் ராஜூவிடம் கேட்டார். இதனால் அந்த இடம் கலகலப்பானது.