Published on 13/05/2019 | Edited on 13/05/2019
திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் சந்திப்பு நிறைவடைந்தது.

இந்த சந்திப்பு சென்னை, ஆழ்வார்பேட்டையிலுள்ள ஸ்டாலின் இல்லத்தில் நடைபெற்றது. உடன் திமுக பொருளாளர் துரைமுருகன், திமுகவின் முதன்மை செயலாளர் டி.ஆர். பாலு ஆகியோர் உடனிருந்தனர். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்பதால் பத்திரிகையாளர்களை அவர்கள் சந்திக்கவில்லை. ஸ்டாலின், சந்திரசேகரராவிற்கு கலைஞர் சிலையை பரிசாக அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சுமார் ஒருமணி நேரம் இந்த சந்திப்பு நிகழ்ந்தது.