சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பகுதியில் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலையடுத்து அவர்கள் சுமுகமாக இருக்க வேண்டும் என வலியுறுத்தி சிவகங்கை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரை சந்தித்த திருவாடனை தொகுதி எம்.எல்.ஏவும், முக்குலத்தோர் புலிப்படை தலைவருமான கருணாஸ் மனு அளித்தார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தபோது, இருதரப்பினரிடையே ஏற்பட்டுள்ள மோதல் விரைவில் சுமுக தீர்வு எட்டப்படும் என நம்புகிறேன். சீமான் எல்லாவற்றையும் அரசியல் ஆக்குவதிலேயே குறியாக உள்ளார். எதில் அரசியல் பண்ண வேண்டுமோ? அதில்தான் அரசியல் பண்ணணும். எல்லாத்தையும் அரசியல் ஆக்குவது என்பது கீழ்த்தரமான அரசியல். பாஜக ஆள் என்பதற்காக விருது கொடுக்கிறார்கள் என்று சொல்வது தவறு.
இப்படி சொல்வதால்தான் கடந்த ஆண்டு தமிழகத்தில் வடசென்னை போன்ற தரமான திரைப்படங்கள் கிடைத்தும் அதற்கான மத்திய அரசின் அங்கீகாரம் கிடைக்கவில்லை. கடந்த முறை பிரதமர் தமிழ்நாட்டுக்கு வந்தபோது சில அமைப்பினர் கருப்புக்கொடி காட்டினர். சில இயக்குநர்கள் பாரதிராஜா போன்றோர் தலைமையிலும் அது நடந்தது. இவர்கள் செய்யும் இதுபோன்ற செயல்களால் தரமான படங்கள் மற்றும் தகுதியானவர்களை இந்திய அளவில் அடையாளம் காட்ட முடியாத சூழலுக்கு தள்ளப்படுகிறோம். சீமான், தனிப்பட்ட முறையில் ரஜினி மீது இருக்கும் கோபத்தை இதுபோன்ற நேரங்களில் அரசியல் ஆக்குவது என்பது ஏற்புடையது அல்ல என்றார்.
திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்டது குறித்தும், திருவள்ளுவர் குறித்து தற்போது எழுந்துள்ள விவகாரம் பற்றிய கேள்விக்கு, மதம் மனிதனுக்காக உருவாக்கப்பட்டது. அதை வைத்து அரசியல் செய்வது நாகரீகமறிற செயல். திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்டது மன்னிக்க முடியாத குற்றம். இதனை யார் செய்திருந்தாலும் தவறு என்றார்.