Skip to main content

ஆட்சியில் இருக்கும்போது என்ன செய்தீங்க அதைச்சொல்லி வாக்கு கேளுங்க; கொதிப்படையும் டெல்டா மக்கள்

Published on 08/04/2019 | Edited on 08/04/2019

“கஜா புயல் பாதிப்பிலிருந்து டெல்டா மாவட்டம் மிகவும் துரிதமாக மீள மத்திய மாநில அரசுகள்தான் காரணம். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கப்பட்டன, மோடி மீண்டும் பிரதமரானால் காவிரி படுகை பகுதியில் உள்ள எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு காணப்படும். பாஜக ஆட்சிக்கு வந்தால் தேர்தல் வாக்குறுதிகள் எல்லாவற்றையும் நிறைவேற்றும்’’  இது திருவாரூரில் தே.மு.தி.க. கட்சியின் பொருளாளர் பிரேமலதா பேசியது.

 

pramalatha

 

“பாபநாசம் தொகுதி முழுவதும் விவசாயத்தை நம்பி உள்ள கிராமங்கள்தான் அதிகம். இந்தப் பகுதிக்கு தேவையான அனைத்து கோரிக்கைகளையும் அமைச்சர் துரைக்கண்ணுவின் பரிந்துரைப்படி செய்து கொடுப்பேன். காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட விவசாய மண்டலமாக மத்திய அரசு அறிவிக்க வலியுறுத்துவேன். பாபநாசம் ரயில்வே ஸ்டேஷனில் அதன் தரத்தை மேம்படுத்தவும், பயனாளிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் அனைத்து ரயில்களும் பாபநாசத்தில் நின்று செல்ல வழிவகை செய்வேன்” இது அதிமுக மயிலாடுதுறை வேட்பாளர் ஆசைமணியும் அமைச்சர் துரைக்கண்ணும் பேசியது.  
 

“திருவாரூர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் விவசாய கல்லூரி மற்றும் பல்துறை தொழில்நுட்ப கல்லூரி அமைக்கப்படும்’’ இது அமைச்சர் காமராஜ் வாக்குறுதி.
 

“விவசாயத்தை அழிக்கும் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களை மத்திய அரசு கைவிட வலியுறுத்துவேன். விவசாய கடன் முழுவதும் தள்ளுபடி செய்ய குரல் கொடுப்பேன். அனைத்து குடும்பத்துக்கும் ரூ. 6,000 உதவி தொகை கிடைக்க செய்வேன், காவிரி டெல்டா பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க 100 நாள் வேலை திட்டத்தில் விவசாயத் தொழிலாளர்களுக்கு தேவையான கருவிகள் இலவசமாக வழங்கவும் வேலைவாய்ப்பு நாட்களை 150 ஆக உயர்த்தவும் ஏழைகளுக்கு இலவச மின்சாரம் கிடைக்கவும் திமுக கூட்டணிக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும்’’ இது மயிலாடுதுறை திமுக வேட்பாளர் ராமலிங்கம் கூறிவருவது.

 

ramalingam

 

இவர்கள் மக்களிடம் வாக்குறுதிகளை கூறிவருவதை செய்யமுடியும். ஆனால் இதுநாள்வரை செய்துள்ளார்களா என நாகை, மயிலாடுதுறை பொதுமக்கள் சிலரிடம் விசாரித்தோம், “வேட்பாளர்கள் விடுகிற கலர், கலரான வாக்குறுதிகள் முழுவதும் ரீல் என்பது எல்லோருக்குமே தெரியும். எதுவுமே படிக்காம, பேசக்கூடத்தெரியாம, தொலைக்காட்சி விவாதத்தில்கூட விவாதிக்க தெரியாத அ.தி.மு.க. வேட்பாளர்கள் அவர்களின் கட்சியின் தலைமையை மீறி என்ன பேசிவிடமுடியும். கடந்தமுறை எம்.பி.யாக இருந்த பாரதிமோகனும், டாக்டர் கோபாலும், வருகை பதிவேட்டில் குறைவைக்கல. ஆனால் எந்த விவாதத்திலும் கலந்துக்கல, எதையும் தொகுதி மக்களின் நலனுக்காக பேசல, பேசவும் தெரியாது. அதே நிலமைதான் இப்பவும், இப்போது மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருப்பவர்கள் ஒரே கூட்டணியில் உள்ளனர். அவர்கள் கடந்த ஐந்தாண்டில் செய்த சாதனைகளை சொல்லி வாக்குகளை கேட்கமுடியல. இனிமேல் நாங்க ஆட்சிக்கு வந்தா செய்வோம்னு சொல்றாங்க. அமைச்சர் துரைக்கண்ணுவிடம், பாபநாசம் ரயில் நிலையம் குறித்து பலமுறை புகார்கொடுத்தாகிடுச்சி, எட்டு வருஷமா கண்டுக்கல. இனி செய்வோம்னு வாக்குறுதி கொடுக்கிறார். கஜா புயலில் மோடி ஆறுதல்கூட சொல்லல, ஆனா அனைத்தையும் செய்துவிட்டதாக பிரேமலதா சொல்ற்றாங்க, இவங்க எல்லாருக்கும் இந்த தேர்தலோட முடிவுகட்டி அனுப்பிடுறோம்’’ என்கிறார்கள்.

 

 

 

சார்ந்த செய்திகள்