Skip to main content

“ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்த முயற்சி செய்வோம்..” - எடப்பாடி பழனிசாமி 

Published on 07/09/2022 | Edited on 07/09/2022

 

ss

 

திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற கட்சி நிர்வாகியின் திருமண விழாவில் கலந்து கொண்டு சென்னை செல்வதற்காக திருச்சி விமான நிலையத்திற்கு வந்த சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளா்களைச் சந்தித்து பேசினார்.

 

அப்போது அவர், “ஓ.பி.எஸ் தரப்பினர் உச்சநீதிமன்றத்திற்கு சென்று இருக்கிறார்கள். நாங்களும் அபிடவிட் தாக்கல் செய்துள்ளோம். ஓ.பி.எஸ்.க்கு திமுகவில் தொடர்பு இருக்கு என்பதை புதுமைப் பெண் திட்டத்திற்கு ஓ.பி.எஸ்சின் மகன் ரவீந்திரநாத் ஆதரவு தெரிவித்து வெளிப்படையாக காட்டிவிட்டார்.

 

திமுக ஆட்சியில் எப்படி உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றதோ அதேபோல்தான் கூட்டுறவு தேர்தலும் நடைபெறும். நியாயமாக தேர்தல் நடைபெறாது. இருந்தாலும் நாங்கள் ஜனநாயக முறைப்படி நடத்த முயற்சி செய்வோம். 

 

அதிகமாக போதைப் பொருள் நடமாட்டம் உள்ளது. இந்த அரசு அதை கட்டுப்படுத்த தவறிவிட்டது. ஆன்லைன் ரம்மியும் தடை செய்ய வேண்டும் என்று தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம் ஆனால் அதற்கு மக்களிடம் கருத்து கேட்கிறது இந்த அரசு. சாலைகள் பாலங்கள் எல்லாம் நாங்கள் கொண்டு வந்த திட்டம் தான். கொள்ளிடம் அணை நாங்கள் போட்ட திட்டம் தான் இதற்கும் "ரிப்பன் கட் பன்னி" தற்போதைய முதல்வர் திறந்து வைப்பார்” என்று கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்