Skip to main content

''உங்களால எதுவுமே செய்ய முடியாது சார்...'' -ஆடியோ வெளியிட்டு ம.நீ.மய்யத்திலிருந்து விலகிய தொழிலதிபர்

Published on 26/03/2019 | Edited on 26/03/2019



 

மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகுவதாகவும், சுயேட்சையாக திருப்பூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட உள்ளதாகவும், ஆடியோ ஒன்றை வெளியிட்டள்ளார் மக்கள் நீதி மய்யம் கட்சியின் திருப்பூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் வெங்கடேசன். 
 

அவர் அந்த ஆடியோவில், 
 

''மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு நாங்க இறங்கி செலவு பண்ணினோம். நீங்க வந்த திருப்பூர் சுற்றப்பயணம், சேலம் நிகழ்ச்சியாகட்டும் 50, 60 ஆயிரம் செலவு செய்துவிட்டு ஒரு நாள்கூட ஓய்வு இல்லை. பின்னர் விவசாயிகளை அழைத்து வர சொன்னீர்கள். மூன்று தொகுதி பொறுப்பாளர் நான். அதுகூட ஒரு தொகுதி சேர்த்து பார்க்க சொன்னீர்கள். எனக்கே தெரியவில்லை நான் எந்த தொகுதி பொறுப்பாளர் என்று. திருப்பூர் மாவட்டத்தை நான் பார்க்கிறேன் என்று சொன்னால், உங்களுக்கு கொடுத்த வேலையை பாருங்கள் என்று அருணாச்சலம் அய்யா சொல்லுகிறார். அதற்கும் நீங்கள் தலையை ஆட்டிவிட்டீர்கள். எல்லாவற்றிற்கும் நீங்கள் தலையையாட்டி பொம்மையாகத்தான் இருக்கிறீர்களேயொழிய நீங்களாக எந்த முடிவும் எடுப்பதில்லை. 

 

Makkal Needhi Maiam kamal-vengadesan thirupur


 

நாமக்கல் தங்கபாலு எனக்கு எதுவுமே தெரியாது என்கிறார்.  ஸ்ரீப்ரியா மேடமும் அதைத்தான் சொல்லுகிறார்கள். அப்ப உங்களுக்கு என்னதான் தகவல் தெரியும். அப்புறம் எப்படி நாட்டை மாத்துவீங்க, எப்படி ஊழலை ஒழிப்பீங்க, சொல்லுங்க பார்க்கலாம். உங்களால எதுவுமே செய்ய முடியாது சார். 
 

நான் பேசியதை நம்ம குரூப்பில்தான் போடுவேன். இது இந்தியா முழுவதும் பரவும். அந்த அளவுக்கு நெட் ஒர்க் நான் வைத்திருக்கிறேன். ஏனென்றால் என்னை கட்சியில் இருந்து தூக்கிவிடுவீர்கள் என்று தெரியும். அதைப்பற்றி எனக்கு கவலையில்லை. ஆனால் இன்னைக்கு ஒரு நாளில் எல்லோருக்கும் போய் சேர்ந்துவிடும். 


எல்லா மாவட்ட பொறுப்பாளர்கள், தொகுதி பொறுப்பாளர்களை சந்தித்து பேசுங்கள். காலேஜ் காலேஜா போனீங்கன்னா ஓட்டு போடுவாங்களா? யாரும் போட மாட்டாங்க. கமல் சாரை பாக்கணுமுன்னு வருவாங்க. பாப் கார்ன் சாப்பிட்டு, பப்ஸ் சாப்பிட்டு போயிடுவாங்க. நீங்க நினைப்பதெல்லாம் தவறு. 
 

மக்களை சந்திக்கணுமுன்னா ஒவ்வொரு மாவட்ட பொறுப்பாளர்களை சந்தியுங்கள். உங்களுக்காக உயிரை கொடுத்து வேலை செய்யுற ஒவ்வொருத்தரையும் பாருங்க. யார் யார் எதை எதை வித்தார்கள் என்று பாருங்கள். 

 

kamal-vengadesan thirupur makkal needhi maiam


 

கமல் சார் உங்க மேல எனக்கு நல்ல நட்பு இருக்கிறது. தமிழ்நாட்டு மக்கள் படிக்காதவர்களாக இருந்தாலும் புத்திசாலி. நீங்க புதுமையை உருவாக்க நினைக்கலாம். உங்க பின்னால் நிற்பவர்கள் மிக மோசமானவர்கள். இந்த தமிழ்நாட்டை ஆள வேண்டும் என்று நினைத்தால் திமுக, அதிமுக மட்டும்தான். அதுதான் உண்மையான கட்சி. அவர்களுக்குத்தான் தெரியும் எங்க மேடு இருக்கிறது, எங்கு பள்ளம் இருக்கிறது, எங்கு குழி இருக்கிறது, எங்கு தண்ணீர் வரும், எதை நிறுத்தணும் என்று அவர்களுக்குத்தான் தெரியும். 

 

நீங்க முதல்ல மக்கள் நீதி மய்யத்தில் நல்ல ஆட்களை தேர்ந்தெடுங்கள். உங்களுக்கு பின்னால் யார் இருக்கிறார்கள் என்று பாருங்கள். 110 மாவட்ட பொறுப்பாளர், 500க்கும் மேற்பட்ட தொகுதி பொறுப்பாளர்கள் களப்பணியாளர்களெல்லாம் போட்டு எல்லாவற்றையும் கெடுத்திடாதீங்க. உண்மையை முதல்ல தெரிஞ்சி, வேலை செய்யுங்கள் ஒவ்வொரு விஷயத்திலும். நன்றி அய்யா. இதற்கு மேல பேச விருப்பமில்லை. ஏனென்றால் இதற்கு மேல பேசினால் உங்களைப் பற்றியே தவறாக பேசிவிடுவேன். நீங்களும் அந்த அளவுக்குத்தான் இருக்கிறீர்கள். நன்றி. வணக்கம்.'' இவ்வாறு பேசியுள்ளார். 

 

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

விஏஓ தற்கொலை; தலைமறைவான இருவருக்கு போலீசார் வலை

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 VAO case; Police net for two fugitives

திருப்பூரில் விஏஓ ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்கொலை தொடர்பாக அவர் எழுதி வைத்துள்ள கடிதத்தின் அடிப்படையில் போலீசார் இருவரை தேடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை கணக்கம்பாளையம் பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் கருப்பசாமி. சொந்த ஊரான பொள்ளாச்சிக்கு கடந்த 22ஆம் தேதி சென்ற விஏஓ கருப்பசாமி, தென்னை மரத்திற்கு வைக்கும் மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அக்கம்பக்கத்தில் இருந்த உறவினர்கள் உடனடியாக கருப்பசாமியை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், செல்லும் வழியிலேயே விஏஓ கருப்பசாமி உயிரிழந்தார்.

இந்த நிலையில் விஏஓ கருப்பசாமி தனது கைப்பட எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று உறவினர்களிடம் சிக்கியது. அந்த கடிதத்தில் தன்னுடைய தற்கொலைக்கான காரணம் குறித்தும் தன்னுடைய இந்த முடிவுக்கு மணியன் என்பவரும், கிராம நிர்வாக உதவியாளரான சித்ரா என்பவரும் தான் காரணம் என எழுதப்பட்டிருந்தது. கடிதத்தை சான்றாக வைத்த அவருடைய உறவினர்கள் சம்பந்தப்பட்ட இருவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உடுமலை கோட்டாட்சியரிடம் புகார் அளித்தனர். அதேபோல் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பாக  40-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் தற்கொலைக்கு தூண்டியவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏற்கனவே கருப்புசாமி எழுதிவைத்து கையெழுத்திட்ட கடிதங்களையும் தற்கொலைக்கு முன்னதாக கருப்பசாமி எழுதிய கடிதம் ஆகியவற்றை ஒப்பிட்டு பார்த்த போலீசார் அதை உறுதி செய்தனர். முன்னதாக சந்தேக மரணம் என பதிவு செய்யப்பட்ட வழக்கு தற்கொலைக்கு தூண்டுதல் என்ற வழக்கிற்கு கீழ் மாற்றப்பட்டது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கிராம நிர்வாக உதவியாளர் சித்ரா மற்றும் மணியன் ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. உடுமலை வட்டாட்சியர் சுந்தரம், சித்ராவை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். தொடர்ந்து சித்ரா தலைமறைவானதால் அவருடைய வீட்டில் பணியிடை நீக்கத்திற்கான நோட்டீஸ் ஒட்டப்பட்டது. தற்பொழுது விஏஓ தற்கொலை தொடர்பாக கிராம உதவியாளர் சித்ராவையும் மணியன் என்பவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story

பென்சில் வாங்க வந்த சிறுமிக்கு சேர்ந்த கொடூரம்; மளிகைக் கடை முதியவருக்கு சிறை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Cruelty meted out to a girl who came to buy a pencil; Jail for grocery shop old man

14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய 62 வயது முதியவரை போலீசார் கைது செய்த நிலையில் வழக்கில் இன்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் மாஸ்கோ நகரைச் சேர்ந்தவர் 62 வயதான சிவா. இவர் மளிகைக் கடை ஒன்றை நடத்தி வைத்து வந்தார். இந்த நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு அதே பகுதியில் வசித்து வந்த 14 வயது சிறுமி ஒருவர் சிவாவின் கடைக்கு சென்று பென்சில் வாங்கியுள்ளார். அப்பொழுது சிறுமியை அழைத்துச் சென்ற சிவா அவரை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளார். இது குறித்து அச்சிறுமி அவரின் பெற்றோரிடம் தெரிவித்த நிலையில் திருப்பூர் வடக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர்.

புகாரைத் தொடர்ந்து போக்சோ சட்டத்தின் கீழ் சிவாவை போலீசார் கைது செய்தனர். இந்தப் பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கு திருப்பூர் மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் இன்று வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதோடு, 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சிவா கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.