Published on 31/05/2019 | Edited on 31/05/2019
நேற்று நடந்த அமைச்சரவையில் அதிமுக கட்சிக்கு இடம் கொடுக்காதது அதிமுக கட்சி தலைமைக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தமிழகத்தில் தேனி நாடாளுமன்ற தொகுதியில் மட்டும் அதிமுக சார்பாக துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார் மட்டும் வெற்றி பெற்றார்.இதனையடுத்து அதிமுகவிற்கு ஒரு மத்திய மந்திரி பதவியும்,ஒரு இணை அமைச்சர் பதவியும் பாஜக தலைமியிடம் கோரலாம் என்று அதிமுக தலைமை முடிவெடுத்தது.
அதிமுக சார்பில் கட்சியின் சீனியரான வைத்தியலிங்கத்துக்கு அமைச்சர் பதவி வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பாஜக தலைமையிடம் கேட்டதாக சொல்லப்படுகிறது.ஆனால் ஓபிஎஸ் தரப்போ தனது மகனுக்கு அமைச்சர் பதவி வேண்டும் என்று கேட்டதாக செய்திகள் வெளியாகின.இதனால் அதிமுகவில் உட்கட்சி பூசல் மீண்டும் வெடித்தது.இந்த நிலையில் நேற்றைய மோடி தலைமையிலான அமைச்சரவையில் அதிமுகவின் பெயர் வரும் என்று எதிர்பார்த்த நிலையில் எந்த பெயரும் வராததால் அதிமுக தலைமைக்கு கடும் அதிர்ப்தியடைந்தது.இந்த நிலையில் டெல்லி சென்ற அனைவரும் தமிழகம் திரும்பினார்கள்.ஓபிஎஸ் மட்டும் டெல்லியில் முகாமிட்டுள்ளதா சொல்லப்படுகிறது.இதனால் அதிமுக கட்சி நிர்வாகிகள் பலரும் ஓபிஎஸ் மீது அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது.