Published on 25/12/2018 | Edited on 25/12/2018

வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு அனைத்துக் கட்சிகளும் தயாராகி வருகின்றன. மக்கள் நீதி மய்யத்தை வலிமைப்படுத்த கமல் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். அண்மையில் செய்தியாளர்களை சந்தித்த கமல், நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதாகவும், "தமிழகத்தின் மரபணுவை மாற்ற நினைக்கும் கட்சிகளுடன் கூட்டணி வைக்க மாட்டோம் என்று தெரிவித்தார்.
மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட தகுதியான வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணிகள் நடந்து வருகிறது என்று தெரிவித்திருந்த நிலையில் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் மக்கள் நீதி மய்யம் தொகுதி பொறுப்பாளர்களை நியமித்துள்ளது.
தேர்தல் காலம் நெருங்க நெருங்க, கமலின் கட்சி நடவடிக்கைகள் வேகம் எடுப்பதால் அவரது ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.