Published on 22/03/2019 | Edited on 22/03/2019

2019 பாராளுமன்றத் தேர்தலில் தென்சென்னை அதிமுக வேட்பாளராக ஜெயவர்தன் போட்டியிடுகிறார். இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தார். அடையாறில் உள்ள தெற்கு வட்டார துணை ஆணையர் அலுவலகத்தில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
அவருடன் எம்.எல்.ஏ நடராஜன், சட்டமன்ற உறுப்பினர் விருகை ரவி ஆகியோர் வந்திருந்தனர். மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்தன் தற்போதும் தென்சென்னை எம்பியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.