Skip to main content

“உங்க மேல அக்கறையினால செஞ்சது இல்ல; இது தான் உண்மை” - சீமான்

Published on 15/03/2023 | Edited on 15/03/2023

 

"It is not out of concern for you; This is the truth” - Seaman

 

அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியர்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பாக அகவிலைப்படி உயர்வை நிலுவைத் தொகையுடன் வழங்க வேண்டும் எனவும், மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அமல்படுத்த வேண்டியும் தலைமைச் செயலகத்தை நோக்கிய பேரணி பல்லவன் இல்லம் முன்பு தொடங்கி நடைபெற்றது.

 

இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார். இந்நிகழ்வில் பேசிய சீமான், “ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களின் ஓய்வூதியத்தை; அவர்களுக்கான அகவிலைப்படி உயர்வை அரசு கருவூலத்தின் மூலம் வழங்க வேண்டும் எனக் கேட்கிறார்கள். 2023 ஆண்டு உயிரிழந்தவர்கள், பணி ஓய்வு பெற்றவர்கள், விருப்ப ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியத் தொகையுடன் இந்த அகவிலைப்படியையும் கொடுக்க வேண்டும். அதோடு உயிரிழந்தவரின் குடும்பத்தில் உள்ளவருக்கு அரசுப்பணியை கொடுக்க வேண்டும் என்பதுதான் கோரிக்கை. 

 

10 கோரிக்கைகள் வைத்துள்ளார்கள். இவை அனைத்தும் முக்கியமான கோரிக்கைகள். இந்த கோரிக்கைகளில் இருக்கும் பொதுநலன் அரசுப் போக்குவரத்தை தனியாருக்கு கொடுத்துவிடாதீர்கள் என்பதுதான். அரசின் நடவடிக்கைகள் அதை நோக்கித்தான் நகருகிறது. அதற்கும் நாம் தான் போராட வேண்டும். ஓய்வு பெறுபவர்கள் வயது 58 வயது இருந்தது. இது 59 ஆனது. இப்பொழுது 60 வயதில் உள்ளது. இது உங்கள் மேல் உள்ள அக்கறையினால் செய்தது அல்ல. இதற்கு காரணம் ஓய்வு பெற்று செல்பவர்களுக்கு கொடுப்பதற்கு பணம் இல்லை. இதுதான் உண்மையிலும் உண்மை. பணம் அரசாங்கத்திடம் இல்லை. அரசாங்கத்தை நடத்துபவர்களிடத்தில் உள்ளது. ஓய்வு பெற்றவர்களை கடும் வெயிலில் வைத்திருப்பது போன்று கருணையற்ற கொடுமை எதுவுமில்லை. இந்த வயதிலும் உரிமைக்காக போராடும் குணம் தான் மிகுந்த பாராட்டுக்கு உரியது” என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்