Skip to main content

''இந்த செயல் ஏற்புடையதல்ல''-திருமாவளவன் கருத்து!

Published on 19/04/2022 | Edited on 19/04/2022

 

'' It is not appropriate to throw a black flag on a car '' - Thirumavalavan comment!

 

தெலுங்கானா மாநிலத்தில் நடைபெற உள்ள புஷ்கர விழாவில் பங்கேற்பதற்கான யாத்திரையை துவக்கி வைப்பதற்காக மயிலாடுதுறை அடுத்துள்ள தருமபுரம் ஆதீனத்திற்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி இன்று வந்திருந்தார். அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு இயக்கத்தினரும், அரசியல்கட்சிகளும் கறுப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதே நேரத்தில் பாஜக சார்பில் ஆளுநருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டிருந்தது.

'' It is not appropriate to throw a black flag on a car '' - Thirumavalavan comment!

 

ஆளுநருக்கு எதிராகக் கறுப்புக்கொடி காட்டி திமுக உள்ளிட்ட கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், அப்பொழுது ஆளுநர் ரவி சென்ற வாகனத்தின் மீது கல் எறியப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் இதுகுறித்து விசிக கட்சித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார். அதில், 'ஆளுநரின் காரின் மீது கருப்புக் கொடியை வீசியது ஏற்புடையதல்ல. அறவழி போராட்டத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் வரவேற்கத்தக்கது அல்ல. 11 மசோதாக்களை தமிழக ஆளுநர் கிடப்பில் போட்டிருப்பதை மக்களின் உணர்வுகளை அவமதிக்கும் செயலாகப் பார்க்கிறோம்' தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்