Skip to main content

பரோல் கேட்டு இளவரசி மனு!

Published on 24/10/2018 | Edited on 24/10/2018
Ilavarasi


 

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா உடன் இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
 

இந்த நிலையில் இளவரசி தனது சகோதரர் உடல்நலக்குறைவாக உள்ளதால், அவரை பார்ப்பதற்காக பரோல் கேட்டு மனு செய்துள்ளதாகவும், இளவரசி பரோல் மனு ஆய்வில் உள்ளதாக சிறை அதிகாரி தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தஞ்சையிலும் அரசுடைமையாகிய சொத்துகள்..!

Published on 09/02/2021 | Edited on 09/02/2021

 

Assets of ilavarisi and sudhakar has been taken by government


சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரின் சொத்துக் குவிப்பு வழக்கில் சம்மந்தப்பட்டுள்ள ஏராளமான சொத்துகளை அரசுடைமையாக்க நீதிமன்றம் உத்தவிட்டிருந்த நிலையில், தற்போது ஒவ்வொரு சொத்துகளாக அரசுடைமையாக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே சென்னை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் உள்ள சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டது. 

 

தஞ்சை-1 சார்பதிவாளர் அலுவலக எல்லைக்கு உட்பட்ட தஞ்சை நகரம், 6 வார்டு, பிளாக் நம்பர் 75-ல், வ.உ.சி தெருவில், 26540 சதுர அடி மனையைக் கடந்த 1995ஆம் வருடம் ரூ.11 லட்சத்திற்கு சுதாகரன் - இளவரசி பங்குதாரர்களாக உள்ள லெக்ஸ் பிராப்பர்டி டெவலப்மெண்ட் நிறுவனம் வாங்கியுள்ளது. 

 

Assets of ilavarisi and sudhakar has been taken by government

 

தஞ்சையில் வாங்கப்பட்ட சொத்துகள் வடசென்னை மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்த சொத்துகளை நீதிமன்ற உத்தரவுப்படி அரசு சொத்தாக மாற்றப்பட்டுள்ளதாக தஞ்சை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதே போல இன்னும் பல சொத்துகள் அரசு சொத்துகளாக மாற்றப்பட உள்ளன.

 

Next Story

காஞ்சிபுரம், செங்கல்பட்டிலும் இளவரசி, சுதாகரன் சொத்துக்கள் அரசுடமை! 

Published on 08/02/2021 | Edited on 08/02/2021

 

asset

 

சொத்துகுவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு சொந்தமான 6 சொத்துகள் அரசுடைமையாக்கப்படுவதாக சென்னை மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருந்த நிலையில் தற்பொழுது காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள சில சொத்துக்களும் அரசுடைமையாக்கப்பட்டுள்ளது.

 

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அடுத்துள்ள ஊத்துக்காடு பகுதியில் அவர்களுக்கு சொந்தமான 300 ஏக்கர் நிலம் அரசுடைமையாக்கப்பட்டது. அதனையடுத்து மாவட்ட ஆட்சியர் மேகேஸ்வரி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

 

Sasikala

 

உச்சநீதிமன்ற மேல்முறையீட்டு வழக்கில் 14/02/20217 அன்று வழங்கப்பட்ட இறுதி தீர்ப்பின் படி, சென்னை வருவாய் மாவட்டத்திற்குட்பட்ட இளவரசி, சுதாகரனின் பெயரிலுள்ள 6 சொத்துகள் அரசின் சொத்து என உரிமை மாற்றம் செய்யப்பட்டு அதன்படி, சென்னை டிடிகே சாலை ஸ்ரீராம் நகரில் உள்ள லெக்ஸ் பிராப்பர்டி, டெவலப்மெண்ட் நிறுவனத்தின் பெயரில் உள்ள சொத்துகள் அதேபோல் சென்னை வாலஸ் தோட்டத்திலுள்ள 5 சொத்துக்கள் அரசுடைமையாக்கப்பட்டுள்ள நிலையில், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டிலும் சொத்துக்கள் அரசுடைமையாக்கப்பட்டுள்ளது.