தமிழகத்தில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று வருகின்றது. முதல் கட்டத் தேர்தல் 27- ஆம் தேதி முடிவடைந்த நிலையில், இன்று (30.12.2019) இரண்டாம் கட்ட தேர்தல் காலை 07.00 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகின்றது. தமிழகத்தில் 27 மாவட்டங்களில் 46,639 ஊராட்சி உள்ளாட்சி பதவிகளுக்கு இன்று வாக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் ஆளும்கட்சித் தரப்பு, இந்த உள்ளாட்சித் தேர்தலில் பணத்தை அதிகமாக செலவு செய்து வருவதாக கூறப்படுகிறது.
உள்ளாட்சித் தேர்தல் செலவுகளை மாவட்ட மந்திரிகள் ஓரளவு ஏத்துக்கிட்ட போதும், முழுச் செலவையும் முதல்வர் எடப்பாடி, துணை முதல் வர் ஓ.பி.எஸ்., அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, விஜயபாஸ்கர் ஆகியோர் அடங்கிய ஐவரணிதான் கவனித்து வருவதாக சொல்லப்படுகிறது. அதன் மூலம் கட்சியின் ஒட்டுமொத்த கட்டுப்பாடும் இந்த ஐவர் அணியின் கைக்கு வந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதே அணி சட்டமன்றத் தேர்தல்லயும் கரன்ஸியோட களமிறங்கப் போகிறதாக தகவல் வருகிறது. காரணம், தி.மு.க. ஆட்சிக்கு வந்தால், தங்கள் துறை வில்லங்கங்கள் தோண்டப்படும் என்பதால் சட்ட மன்றத் தேர்தலில் வெற்றிபெறுவது மிக முக்கியம் என்று நினைப்பதாக சொல்லப்படுகிறது. அதனால்தான் இந்த டீம் கட்சியின் கட்டுப்பாட்டை இறுகப் பற்றிக்கொண்டு இருப்பதாக சொல்கின்றனர்.