நாட்டின் மக்களவை தேர்தல் மொத்தம் ஏழு கட்டங்களாக நடைபெற்றுவருகிறது. கடந்த 18-ம் தேதி தமிழகத்தில் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்தது. மேலும் அண்டை மாநிலமான கேரளாவில் வரும் 23-ம் தேதி நடைபெறவிருக்கிறது.
கேரளாவில் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அக்கட்சி சார்பாக போட்டியிடுகிறார். இது குறித்து நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் பாஜக அமைச்சர் பியூஷ் கோயல், “ராகுல் காந்தி போட்டியிடும் அமேதி தொகுதியில் அவரை எதிர்த்து எங்கள் கட்சி சார்பாக அமைச்சர் ஸ்மிரிதி ரானி போட்டியிடுகிறார். ஸ்மிரிதி ரானி அவரை அமேதி தொகுதியில் நிச்சயம் தோற்கடிப்பார். அதனால் ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் போட்டியிட ஓடிவிட்டார். ஆனால், வயநாட்டிலும் ராகுல் காந்தி தோல்வியை தழுவுவார். அனேகமாக அடுத்த தேர்தலில் அவர் அண்டை நாடுகளில் எங்கேயாவது போட்டியிட தொகுதி தேடுவார்” என்று தெரிவித்துள்ளார்.