சமத்துவ மக்கள் கட்சி சார்பில் நலிந்தோர்க்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் தீபாவளி பரிசுகள் வழங்கும் விழா நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட சரத்குமார் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ஆறுமுகசாமியின் அறிக்கையை முழுமையாக படிக்கவில்லை. அதே போல் தான் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பந்தமான அறிக்கையும். இரண்டு மூன்று நாளில் அதை முழுமையாக படித்துவிட்டு அதற்குறிய அறிக்கையை கொடுக்கிறேன். இதுவரைக்கும் நான் 15 ஆண்டு காலத்தில் நான்காயிரம் அறிக்கை கொடுத்துள்ளேன். அந்த அறிக்கைகளை புத்தகமாக வெளியிடலாம் என்று கூட முடிவு செய்துள்ளேன்.
அனைத்து மொழிகளையும் கற்று கொள்ளவேண்டும் என்பதுதான் சமத்துவ மக்கள் கட்சியின் கொள்கை. இந்தியை தெரிந்து கொள்வதில் தப்பில்லை. இந்தியை திணிக்கக் கூடாது என்றுதான் சொல்கிறோம்.
ஆன்லைன் ரம்மியை தடுப்பது மட்டும் அல்ல. ஆன்லைன் சூதாட்டங்களையும் இந்தியாவில் தடுக்க வேண்டும். பல விஷயங்களை தடுப்பதற்கு முயற்சி எடுக்க வேண்டும். முடிவு எடுத்தால் அதில் உறுதியாக இருக்க வேண்டும். ரம்மி விளம்பரத்துல நடிச்சேன். அதனால மக்களை கெடுத்துட்டேன்னு சொல்லவே மட்டேன். தீபாவளிக்கு பாருங்க... வீடுகளில் உட்கார்ந்து சீட்டுகளை ஆடிக்கொண்டு இருப்பார்கள். அரசு தடை செய்துவிட்டால் அதில் எப்படி நான் நடிப்பேன். கிரிக்கெட் போட்டிகளில் ஒரு செயலி மூலம் சூதாட்டம் தான் நடைபெறுகிறது. அதை எல்லாம் தடுக்க வேண்டுமே. அரசு தடை செய்தால் அப்போது அதற்கு ஆதரவாக சமத்துவ மக்கள் கட்சிதான் முதல் குரல் கொடுக்கும்” எனக் கூறினார்.