Skip to main content

ஸ்டாலின், ப.சிதம்பரத்தை கடுமையாக விமர்சித்த ஹெச். ராஜா!

Published on 25/02/2020 | Edited on 25/02/2020

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து  மத பாகுபாட்டல் இந்தியாவிற்கு இடம்பெயர்ந்த இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்கும் வகையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்தார். பின்னர் இது சட்டமாக்கப்பட்டது. இந்த சட்டத்திற்கு எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. குடியுரிமை சட்ட திருத்தம் குறித்து மத்திய அரசு பொய் கூறுவதாக முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்திருந்தார்.

 

H Raja Condemned stalin and p chidambaram

 



இதற்கிடையில் இந்த சட்டத்திற்கு எதிராக டெல்லியில் மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தை போலீசார் தடியடி நடத்தி கட்டுக்குள் கொண்டுவர முயற்சித்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து மாணவ போராட்டம் நாடு முழுவதும் வலுப்பெற்றது. இதில் சென்னை வண்ணாரப்பேட்டையில் பிப்ரவரி 14ஆம் தேதி குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் நடத்திய போராட்டத்தில் போலீசார் தடியடி நடத்தினர். இதனை வன்மையாக கண்டித்த திமுக தலைவர் ஸ்டாலின், " பிப்ரவரி 14 இரவை காவல்துறையினர் கருப்பு இரவாக்கி விட்டனர்" என்று குற்றம்சாட்டினார்.

 



இந்நிலையில் தற்போது டெல்லியில் போராட்டக்காரர்களுக்கும் குடியுரிமை சட்ட திருத்த ஆதரவாளர்களுக்கும் இடையே கலவரம் ஏற்பட்டுள்ளது. தற்போது டெல்லி பரபரப்பாக காணப்படுகிறது. இந்நிலையில் அந்த கலவரத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள  பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, "இவர்களை ஆதரிக்கும் ப.சிதம்பரம், ஸ்டாலின் போன்றவர்கள் பொதுவாழ்விலிருந்து அப்புறப்படுத்தப்பட வேண்டியவர்கள்" என பதிவிட்டுள்ளார்.  

 

 

சார்ந்த செய்திகள்