Skip to main content

பணிக்கு வரும் அரசு ஊழியர்கள் முகக்கவசம் அணிவதுடன், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் -நாராயணசாமி உத்தரவு! 

Published on 20/04/2020 | Edited on 20/04/2020

 

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி புதுச்சேரி நெல்லித்தோப்பு மார்க்கெட்டில் ஆய்வு செய்தார். அங்குள்ள வியாபாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் முகக் கவசம் வழங்கினார். வியாபாரிகளிடம் சமூக இடைவெளிவிட்டு பொருட்கள் வியாபாரம் செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.
 

narayanasamy


 


அதனைத்தொடர்ந்து  புவன்கரே வீதியில் உள்ள தற்காலிக மார்க்கெட்டை ஆய்வு செய்து, அங்குள்ள வியாபாரிகள், பொதுமக்களுக்கு முகக்வசம் அளித்து சமூக இடைவெளியைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து மூலகுளம் சந்திப்பு,  மரப்பாலம் சந்திப்பு, முருங்கப்பாக்கம் சந்திப்பு ஆகிய பகுதிகளுக்குச் சென்று பாதுகாப்பு ஏற்பாடுகள் சம்பந்தமாகவும்  காவல்துறை அதிகாரிகளை அழைத்துப் பேசி,  அங்குள்ள காவலர்களுக்கும் முகக் கவசம் வழங்கி ஆலோசனை நடத்தினார். 
 

narayanasamy


அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இன்று கரோனோ தொற்றால் பாதித்த ஒருவருக்கு தொற்று இல்லை என்பதால் வீட்டிற்கு அனுப்பட்டுள்ளார். புதுச்சேரி மாநிலத்தில் கரோனா தொற்றால் 7 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் 4 பேர் குணமடைந்ததால் 3 பேர் மட்டுமே தற்போது இந்திராகாந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

 

narayanasamy

 

http://onelink.to/nknapp


புதுச்சேரியைத் தவிர மாஹே, ஏனாம், காரைக்கால் பகுதிகளில் யாருக்கும் தொற்று பாதிப்பு இல்லை. தற்போது புதுச்சேரியில் 1001 பேரும், காரைக்கால் பகுதியில் 1034 பேரும், மாஹே பகுதியில் 102 பேர் , ஏனாம் பகுதியில் 478 பேர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக 3025 பேர்கள் தனிமைப் படுத்தப்பட்டுள்ளார்கள். இதனால் புதுச்சேரியில் தொற்று குறைந்து வருவது தெரிகின்றது. 

புதுச்சேரியில் அரியாங்குப்பம், லாஸ்பேட்டை, மூலக்குளம், திருபுவனை, காட்டேரிக்குப்பம் ஆகிய பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. ஒருவர் குணமானாலும் அந்தப்பகுதி 28 நாட்களுக்கு தனிமைப்படுத்தப் படவேண்டும் என்று மத்திய அரசு அறிவுத்தியுள்ளதால் அதைக் கடைப்பிடித்தாக வேண்டும்.

 

 

narayanasamy



20.04.2020 திங்கள்கிழமையில் இருந்து பல துறைகளுக்கு மத்திய அரசு விதிவிலக்கு அறிவித்துள்ளது. விவசாயம், உரைக்கடைகள், விதை கடைகள் திறந்து வைக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் விளைப்பொருட்களை ஏற்றிச் செல்லத் தடையில்லை. கட்டுமானப் பணிகள், சாலை அமைப்புகளுக்கு அனுமதி உண்டு. மின்சாதனம் பழுதுபார்ப்போர், கொல்லர்கள், தச்சு வேலை செய்ப்பவர்கள் வேலை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

மீன்பிடித் தொழிலுக்கு தடைகாலம் இருந்தாலும் மத்திய அரசு அனுமதி அளித்து சலுகை அளித்துள்ளது. ஆனால் கட்டுப்பாடுகளுக்கு கட்டுப்பட்டு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலைகளில் வருபவர்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். முகக்கவசம் அணியவேண்டும், சானிடைசர்  உபயோகிக்க வேண்டும். 

 

வெளிமாநிலத்தைச் சார்ந்தவர்களை அழைத்து வரக்கூடாது. தொழிற்சாலைகள் ஊழியர்களை அருகில் வைத்து பராமரிக்க வேண்டும், விதிமுறைகளைப் பின்பற்றாத தொழிற்சாலைகளுக்கு அனுமதி அளிக்கப்படமாட்டாது.  அத்தகைய தொழிற்சாலைகள் மூடப்படும். ஏப்ரல் 20 முதல் 33 சதவீத ஊழியர்கள் வர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவர்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளிவிட்டு பணியாற்றவேண்டும்.  
 

ஹோட்டல்கள் தொடர்ந்து செயல்படலாம். இருந்தபோதும் பார்சல் மட்டும் அனுமதிக்கப்படும். இறைச்சிக் கடைகளில் சமூக இடைவெளி இல்லை என்றால் உரிமம் ரத்து செய்யப்படும். கரோனா தடுப்பில் இந்திய அளவில் புதுச்சேரி இரண்டாம் இடத்தில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


 

சார்ந்த செய்திகள்