Published on 02/02/2023 | Edited on 02/02/2023

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் 27 ஆம் தேதி நடைபெற இருப்பதால் ஆளும் கட்சியான திமுக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலையொட்டி, ஈரோட்டில் திருச்சி தெற்கு மாவட்ட கழக நிர்வாகிகளால் அமைக்கப்பட்ட தேர்தல் பணிமனைகளை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் திறந்து வைத்தனர். உடன், கோட்டத்தலைவர் மதிவாணன், முன்னாள் எம்எல்ஏ கே.என்.சேகரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இதனைத் தொடர்ந்து திமுகவினர் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு ஆதரவாக கை சின்னத்தில் வாக்கு சேகரித்தனர்.