Skip to main content

அதிமுகவை கழட்டி விடும் பாஜக,பாமக!

Published on 04/06/2019 | Edited on 04/06/2019

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக,பாஜக கூட்டணி தமிழகத்தில் படு தோல்வியை சந்தித்தது.அதிமுக சார்பாக தேனி தொகுதியில் போட்டியிட்ட துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்குமார் மட்டுமே வெற்றி பெற்றார்.மீதமுள்ள அதிமுக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அனைவரும் தோல்வி அடைந்தனர்.இதனால் தோல்விக்கு ஒருவர் மீது ஒருவர் பழி சுமத்திகொண்டு இருந்தனர்.

 

pmk



இந்த நிலையில் அதிமுகவிற்கு மந்திரி சபையில் இடம் கொடுக்கப்படும் என்று எதிர்பார்த்த நிலையில் அதிமுகவில் யாருக்கும் மத்திய மந்திரி பதவி கொடுக்கவில்லை.மேலும் அதிமுக சார்பாக நடத்தப்பட்ட இப்தார் நோன்பு நிகழ்ச்சியில் அனைத்து கூட்டணி கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு கொடுக்கப்பட்டது.ஆனால் அந்த நோன்பு நிகழ்ச்சியில் பாமக சார்பாக ராமதாஸ் மட்டும் கலந்து கொண்டதாகவும்,பாஜக சார்பாக எந்த தலைவர்களும் கலந்து கொள்ளவில்லை.இது பற்றி விசாரித்த போது அதிமுக மீது பாஜக அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது.


மேலும் தமிழகத்தில் தேர்தல் தோல்விக்கு இரண்டு கட்சிகளும் மாறி மாறி குற்றம் சாட்டுவதாகவும் சொல்லப்படுகிறது.பாமக சார்பில் விசாரித்த போது ராஜ்யசபா கொடுக்கப்படும் என்று அதிமுக சார்பாக இன்னும் உறுதியாக சொல்லப்படவில்லை என்றும்,  8 வழி சாலை திட்டத்தை மீண்டும் அதிமுக கையில் எடுத்திருப்பது பாமாவிற்கு பிடிக்கவில்லை என்றும் சொல்லப்படுகிறது. இதனால் உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுடன் பாஜக ,பாமக கூட்டணி வைக்குமா என்பது கேள்வி குறியாகியுள்ளது.

சார்ந்த செய்திகள்