Skip to main content

அமைச்சர் ஜெயக்குமார் மகனுக்கு செக் வைக்கும் அதிமுக முக்கிய புள்ளி... எடப்பாடியின் செம்ம ப்ளான்!

Published on 16/11/2019 | Edited on 16/11/2019

சென்னை ராயபேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில்  தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் கடந்த வாரம் நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, உள்ளாட்சி தேர்தலில் 95 சதவிகித இடங்களில் நாம் வெற்றிபெறுவோம்.  நாங்குநேரி, விக்கிரவாண்டியில் எப்படி திட்டமிட்டு வெற்றி பெற்றோமோ அதேபோல் வெற்றிபெற வேண்டும். உள்ளாட்சித்தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்களிடம் மனுக்கள் பெற குழு அமைக்கப்படும். சிறந்த வேட்பாளர்களை தயார்படுத்த வேண்டும் என பேசியிருந்தார். 

 

admk



மேலும் வர இருக்கும் உள்ளாட்சி தேர்தலில் அமைச்சர் ஜெயக்குமார் மகனுக்கு சென்னை மேயர் பதவி வாங்கும் எண்ணத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதே போல் அதிமுகவில் இருக்கும் பல அமைச்சர்கள் உள்ளாட்சி தேர்தலில் வாரிசுகளுக்கு சீட் கேட்கலாம் என்ற முடிவில் இருந்துள்ளனர். இந்த நிலையில்  மேயர் பதவிக்கு அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்தன் போட்டியிட விருப்பமனு தாக்கல்  செய்துள்ளார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தென் சென்னை தொகுதியில் திமுக வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்டு தோல்வி அடைந்தவர்அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்தன். இந்த நிலையில் உள்ளாட்சித் தேர்தல் வருகின்ற டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது என்று தகவல் வெளியாகி வருகிறது. இதனையொட்டி அதிமுக சார்பில் விருப்பமனு விநியோகம் நடைபெற்று வருகிறது.இதில் சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கு அதிமுக சார்பில் அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்தன் போட்டியிட விருப்பமனு தாக்கல்  செய்துள்ளார். 
 

 

admk



இந்த நிலையில் கடந்த வாரம் அதிமுக தலைமையில் நடந்த கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் நாம் வெற்றி பெற வேண்டும் என்றால், ஒரு சில முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டும் என்று அதிமுகவின் அவை தலைவர் மதுசூதனன் கூறியதாக சொல்லப்படுகிறது. அப்போது உள்ளாட்சி தேர்தலில் வாரிசுகளுக்கு சீட் கேட்காமல் கட்சியில் சிறப்பாக பணியாற்றிவர்களுக்கு சீட் வழங்குவதில் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று அதிமுக அவைத்தலைவர் பேசியதாக சொல்லப்படுகிறது. இதனால் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட பல அமைச்சர்களின் கனவு பலிக்காது என்று கூறிவருகின்றனர். மேலும் கூட்டணிக் கட்சிகள், உட்கட்சி மோதல் போன்ற பல பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது என்று துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம் கூறியதாகவும் சொல்கின்றனர். இதனால் உள்ளாட்சி தேர்தலை தள்ளி வைக்கலாம் என்றும் பேசியதாக கூறுகின்றனர். மேலும் வாரிசுகளுக்கு சீட் கேட்கும் அதிமுக அமைச்சர்கள் மற்றும் சீனியர்களுக்கு அவைத்தலைவர் மூலம் கடந்த வாரம் நடந்த கூட்டத்திலேயே முதல்வர் குரலாக மதுசூதனன் பேசிவிட்டார் என்று கூறிவருகின்றனர்.  

சார்ந்த செய்திகள்