அதிமுக எம்எல்ஏக்கள், எம்பிக்கள் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நாளை நடைபெற உள்ளது. இதில் உள்ளாட்சித் தேர்தல் மற்றும் கட்சியின் பொதுக்குழு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட உள்ளன. இதனிடையே இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு முன்பு எம்எல்ஏக்கள், எம்பிக்கள் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தங்கள் பகுதியில் உள்ள நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர். இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தலில் சீட் கேட்டு கூட்டணி கட்சிகள் கொடுக்கும் நெருக்கடியால் அதிமுக அதிர்ச்சியில் உள்ளது. உள்ளாட்சி தேர்தலில் மூன்று மேயர் வேண்டும் என்று பாஜக அதிமுகவை கேட்டு கொண்டதாக சொல்லப்படுகிறது.
அதில் குறிப்பாக கோயம்பத்தூர், நாகர்கோவில் ஆகிய மாநகராட்சிகள் வேண்டும் என்று மத்தியில் ஆளும் பாஜக அரசு அழுத்தம் கொடுத்து வருவதாக கூறுகின்றனர். இடைத்தேர்தலில் அதிமுக வெற்றிக்கு முக்கிய காரணமாக நாங்க தான் இருந்தோம் என்று சொல்லும் பாமகவும் மேயர் பதவி கேட்பதாக கூறுகின்றனர். அதிலும் சென்னை மேயர் பதவி வேண்டும் என்று பாமக எடப்பாடியிடம் கேட்டதாக கூறுகின்றனர். இதனால் எடப்பாடி கடும் அதிர்ச்சி அடைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. கூட்டணி கட்சிகளான பாஜகவும், பாமகவும் மேயர் பதவி கேட்டு அதிமுகவிற்கு கடும் நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.
இது ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கும் போது தேமுதிகவும் அதிமுக இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதற்கு நாங்க தான் காரணம் என்று கூறி வருகிறது. அதனால் பாஜக மூலம் அதிமுகவிற்கு நெருக்கடி கொடுத்து எங்களுக்கும் மேயர் பதவி வேண்டும் என்று கேட்டு வருவதாக சொல்லப்படுகிறது. கூட்டணி கட்சிகளின் பதவி ஆசையை அறிந்த அதிமுகவில் உள்ள சீனியர்கள் தங்களுக்கு தான் மேயர் பதவி தர வேண்டும் வேண்டும் கூட்டணி கட்சிகளுக்கு தரக்கூடாது என்று பகிரங்கமாக அதிமுக தலைமையிடம் கூறிவருகின்றனர். இதனால் அதிமுக தலைமைக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.