Published on 01/04/2019 | Edited on 01/04/2019
தமிழ்நாட்டில் நடக்கும் தேர்தல் பறக்கும் படை சோதனையில் தினமும் கோடிக்கணக்கான ரூபாய்கள் அல்லது அந்தளவிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன.

இந்நிலையில் மார்ச் 31 வரை பறக்கும் படை நடத்திய சோதனையில் எவ்வளவு பறிமுதல் செய்யப்பட்டது என்பது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ பத்திரிகையாளர்களிடம் தெரிவித்துள்ளார். அதன்படி 78.12 கோடி ரூபாய் மற்றும் 90.78 கோடி ரூபாய் மதிப்புள்ள 328 கிலோ தங்கம், 1.68 கோடி ரூபாய் மதிப்புள்ள 409 கிலோ வெள்ளி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.