நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேனி தொகுதியில் போட்டியிட்ட ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத் குமாரை தவிர அதிமுக கூட்டணியில் உள்ள அனைத்து வேட்பாளர்களும் தோல்வி அடைந்தனர். ஏற்கனவே வாரணாசி வரை சென்று தனது மகனுக்கு அமைச்சர் பதவி அளிக்க வேண்டும் என்று ஓ.பி.எஸ். பாஜக மேலிடத்தில் வலியுறுத்தி வந்தார்.
ஓ.பி.எஸ்.ஸின் இந்த மூவ் எடப்பாடி பழனிசாமியை பெருமளவு டென்ஷன் ஆக்கியிருக்கிறது. டெல்லியில் மோடியும் அமித்ஷாவும் தேர்தல் முடிவுகள் வந்ததும் மூன்று முறை அமர்ந்து பேசினார்கள். அதே சமயத்தில் தமிழகத்தில் இ.பி.எஸ். வீட்டில் மூன்று முறை கூட்டம் நடந்தது.
ஓ.பி.எஸ். தனது மகனுக்காக டெல்லியில் பலரை தொடர்பு கொண்டார். ஓ.பி.எஸ்.ஸின் முயற்சியை தடுக்க இ.பி.எஸ். மற்றும் தங்கமணி, வேலுமணி ஆகியோர் பியூஸ் கோயலின் உதவியை நாடினார்கள்.
அவரோ, தமிழகத்தில் பாஜகவின் வேட்பாளர்கள் ஐந்து பேரும் தோல்வியடைய நாங்கள் அதிமுகவுடன் கூட்டணி வைத்ததுதான் காரணம். தனித்து போட்டியிட்டிருந்தால் கன்னியாகுமரி, ராமநாதபுரம், கோவை ஆகிய தொகுதிகளில் நாங்கள் வெற்றி பெற்றிருப்போம். தேர்தல் காலத்தில் கொங்கு மண்டலத்தில் ஒரு தொகுதி கேட்டு இ.பி.எஸ்.ஸிடம் பேசினேன். ஆனால் அவர் தென்சென்னை, திருப்பூர் ஆகிய தொகுதிகளை தர மறுத்துவிட்டார்.
இப்போது பெரிய தோல்வியை சந்தித்துவிட்டு ஓ.பி.எஸ். மகனுக்கு மந்திரி பதவி தரக்கூடாது என என்னை பேசச் சொல்கிறீர்கள். என்னால் முடியாது என கோபமாக மறுத்துவிட்டார். அதனைத் தொடர்ந்து ஓ.பி.எஸ்.ஸை ஏற்கனவே புறக்கணித்து டென்ஷனாக்கியிருந்த நிர்மலா சீதாராமனை தொடர்பு கொண்டார்கள். அவரும் நத்திங் டூயிங் என கோபமாக மறுத்துவிட்டார்.