Skip to main content

“எடப்பாடியை நம்பி போனால்...” - திருமாவை எச்சரிக்கும் புகழேந்தி!

Published on 15/09/2024 | Edited on 15/09/2024
"Edappadi should pave the way for unity" - Pugazendi Sulurai!

சென்னை அண்ணா சாலையில் உள்ள பேரறிஞர் அண்ணா திருவுருவ சிலைக்கு அண்ணா திமுக ஒருங்கிணைப்பு குழு சார்பில் தனது ஆதரவாளர்களுடன் வா.புகழேந்தி மாலை அணிவித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது “விடுதலை சிறுத்தைகளின் தலைவர் தொல்.திருமாவளவன் அரசியலுக்கு அப்பாற்பட்டு நடத்துகின்ற மது ஒழிப்பு மாநாடு வரவேற்கத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் தொடர் தோல்விகளின் கதாநாயகன் எடப்பாடி பழனிசாமி உடன் விடுதலை சிறுத்தைகள் கட்சியினுடைய தலைவர் தொல்.திருமாவளவன் இணைய இருக்கிறார் என்று சொல்லுவது அரசனை நம்பி புருஷனை கைவிடும் கதையாக முடியும். இது திருமாவளவன் அவர்களுக்கு நன்றாகவே தெரியும். மூன்று ஆண்டுகளாக பேரறிஞர் அண்ணா பெயரில் எதையும் இந்த அரசு செய்யவில்லை என்ற உங்கள் கேள்வி நியாயமானது. தந்தை பெரியார் இடத்திலே இருந்து பிரிந்து வந்த பேரறிஞர் அண்ணா தந்தை பெரியாரைத் தான் தலைவர் என்று கொண்டாடினார்.

எப்பொழுதும் தந்தை பெரியாருக்காக தலைவர் பதவி அந்த நாற்காலி காலியாக இருக்கும் என்று அதனை நடைமுறைப்படுத்தினார். ஆட்சியாளர்கள் அதனை உணர வேண்டும். கட்சியும் ஆட்சியும் திராவிட இயக்கங்கள் மாறி மாறி ஆண்டதும், பேரறிஞர் அண்ணா அவர்களையே சாரும். ஆகவே பேரறிஞர் அண்ணா பெயரில் திட்டங்களை துவக்கினால் இந்த அரசனை மக்கள் பாராட்டுவார்கள். தொடர்ந்து 55 ஆண்டுகளுக்கு மேலாக திராவிட இயக்கங்கள் மாறி மாறி ஆண்டு வருவதற்கு பேரறிஞர் அண்ணா அவர்களின் மேடை பேச்சும் அவர் கண்ட போராட்டங்களும் காரணம். தமிழுக்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்தவர் பேரறிஞர் அண்ணா. திராவிட இயக்கங்களில் முதன்மையான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் இன்று பிரிந்து இருப்பதற்கு எடப்பாடி பழனிசாமி தான் காரணம். கட்சிக்கு ஒற்றுமை வேண்டும் என்பதை பேரறிஞர் அண்ணா பிறந்த நாளில் உணர்ந்து திருந்தி பழனிசாமி ஒற்றுமைக்கு வழி வகுக்க வேண்டும் என்பதே எனது சூளுரை” என்றார்

சார்ந்த செய்திகள்